"தக்கோலம்
தீம்பூத் தகைசால் இலவங்கம்
கற்பூரம் சாதியோ டைந்து" |
என்பதனால் உணர்க. (26)
செம்பொ
னறையைத் திறந்தழைத்துக் காட்டி யினைய திருவெல்லாம்
உம்பர் பெருமா னடியீர்நீ ருடையீர் கவர்ந்து கொண்மினென
இம்பர்நிழற்றும் வெண்குடையா னிசைப்ப வெதிர்தாழ்ந் திசைக்கிழவன்
நம்ப னருளுக் குரியீர்நீர் நல்கிற் றமையு மெனக்கென்ன. |
(இ
- ள்.) செம்பொன் அறையைத் திறந்து - கருவூலத்தைத் திறந்து,
அழைத்து - (பாணபத்திரனை) அழைத்து, காட்டி - காண்பித்து, இனைய
திரு எல்லாம் - இந்தச் செல்வம் அனைத்தையும், உம்பர் பெருமான்
அடியீராகிய, நீர் உடையீர் - நீரே உடையீர், கவர்ந்து கொள்மின் என -
கைக் கொள்ளுமென்று, இம்பர் நிழற்றும் வெண்குடையான் இசைப்ப -
இந்நிலவுலகிற்கு நிழல் செய்யும் வெள்ளிய குடையையுடைய சேர மன்னன்
கூற, எதிர் தாழ்ந்து இசைக் கிழவன் - இசைக்கு உரிய பாணபத்திரன் எதிர்
வணங்கி, நம்பன் அருளுக்கு உரியீர் நீர் - இறைவன் திருவருளுக்
குரியீராகிய நீர், நல்கிற்று எனக்கு அமையும் என்ன - தந்தது எனக்குப்
போதிய தென்று கூற.
யாவும்
உம்முடையனவே கைக்கொள்ளும் என்ன அங்ஙனம்
வேண்டாம் நீர் கொடுக்கமளவு அமையுமென்று பாணர் கூற வென்க. (27)
மன்னன் றானெண் ணியவாற்றால் வழங்க வழங்க மறுத்துமறுத்
தின்ன றீரு மிசைக்கிழவ னிலங்கும் பொலம்பூ ணிருநிதியம்
பொன்னஞ் சிவிகை கரிபரிமான் பொற்பட் டாடை பலபிறவுந்
தன்ன வென்னு* மளவாற்றாற் றானே கொள்ளத் தார்வேந்தன். |
(இ
- ள்.) மன்னன் - சேரமான் பெருமாள், தான் எண்ணிய வாற்றால்
வழங்க வழங்க - எல்லாப் பொருளும் அவருடையன வென்று தான்
கருதியபடி கொடுக்கக் கொடுக்க, இன்னல் தீரும் இசைக்கிழவன் மறுத்து
மறுத்து - துன்பம் நீங்கும் பாணபத்திரன் அவற்றை மறுத்து மறுத்து,
இலங்கும் பொலம் பூண் விளங்குகின்ற பொன்னணிகளையும், இருநிரியம் -
பெரிய நிதியையும், பொன் அம்சி விகை - பொன்னாலாகிய அழகிய
சிவிகைகளையும், பல கரி பரி மான் பொன்பட்டு ஆடை - பல
யானைகளையும் குதிரைகளையும் பொன்னாலாகிய பட்டாடைகளையும்,
பிறவும் - பிறவற்றையும், தன்ன என்னும் அளவாற்றால் கொள்ள தனக்கு
அமைவன வென்னும் அளவின் வகையால் ஏற்றுக்கொள்ள, தார் வேந்தன் -
மாலையை யணிந்த மன்னனாகிய சேரமான்.
(பா
- ம்.) * தன்னதென்னும்.
|