II


422திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



போக்கி - மிடற்றின் ஒலியை எழுப்பி, தமிழின் தொடை இசைப்பாணி
- தமிழினால் தொடுக்கப்பட்ட இசைப்பாட்டாகிய, சுவை அமுதம் மடை
திறந்து - சுவைமிக்க அமிழ்தம் மடை யுடைத்து, பொலம் கொன்றைச்
சடைக் கடவுள் - பொன் போன்ற கொன்றை, மாலையை யணிந்த சடையை
யுடைய சோமசுந்தரக் கடவுளின், செவி வழிபோய் - செவியாகிய கால்
வழியாகச் சென்று பாய்தலால், அருள் பைங்கூழ் தலையெடுப்ப -
திருவருளாகிய பயிர் ஓங்கும்படி. (8)

நரம்புநனைந் திசைமழுங்க நனைந்துடலம் பனிப்பவிசை
வரம்பொழுகு விரன்மிறைத்து வலிவாங்க மயிர்சிலிர்ப்ப*
நிரம்பியசே றடிபுதைப்ப நின்றுநிறை யன்பிசையாய்
அரும்புதல்போ லென்புருக்கு மமுதவிசை பாடுமால்.

     (இ - ள்.) நரம்பு நனைந்து இசைமழுங்க - யாழின் நரம்பு நனைந்து
சுருதி குறையவும், உடலம் நனைந்து பனிப்ப - உடம்பு நனைந்து நடுங்கவும்,
இசை வரம்பு ஒழுகு விரல் - (குரல் முதலிய) இசையினெல்லை கடவாது
போக்கு வரவு செய்யும் விரல்கள், மிறைத்து வலிவாங்க - விறைத்து
வலிகொள்ளவும், மயிர் சிலிர்ப்ப - (குளிரால்) மயிர் சிலிர்க்கவும் நிரம்பிய
சேறு அடி புதைப்ப - நிரம்பிய சேறு அடிகளை மூடவும், நின்று -
(பெயராது) நின்று, நிறை அன்பு இசையாய் அரும்புதல் போல் - நிறைந்த
அன்பே இசை மயமாய் வெளிப்படுதல் போல, என்பு உருக்கும் அமுத
இசைபாடும் - எலும்புனையும் உருக்குகின்ற அமுதம் போன்ற இசையினைப்
பாடுவானாயினன்.

     மழையால் இவை நிகழவும் நிறைந்த அன்பினால் இம் பெயராது
நின்று அருட் பைங்கூழ் இசைபாடும் என்க. ஆல் : அசை. (9)

[இடைமடக்கி வந்தகொச்சகவொருபோகு]
மாதர் நகையாய் மதுரேச ருண்பலிக்கெம மனைவாய் வந்து
காதன் முகத்தரும்பிக் காட்டியென் சிந்தை கவர்ந்தார் போலுங்
காதன் முகத்தரும்பக் கையறவு தீரக் கலப்பேன் பாதி
பேதையுரு வாயிருந்தார் நாணிவிழித் தாவி பிழைத்தேன் போலும்.

     (இ - ள்.) மாதர் நகையாய் - அழகிய பல் வரிசைகளையுடைய
தோழியே, மதுரேசர் உண் பலிக்கு - மதுரையில் எழுந்தருளிய இறைவர்
உண்ணும் பலியின் பொருட்டு, எம்மனைவாய் வந்து - நமது மனையின்கண்
வந்து, முகத்து காதல் அரும்பிக் காட்டி - முகத்தின் கண் காதற்குறியை
வெளிப்படுத்திக் காட்டி, என் சிந்தை கவர்ந்தார் போலும் - எனது
உள்ளத்தைக் கொள்ளைகொண்டனர் போலும்; காதல் முகத்து அரும்ப -
அங்ஙனம் காதற் குறிப்பு முகத்திலே தோன்ற, கையறவு தீரக் கலப்பேன் -
காமநோய் தீருமாறு கலக்கத் தொடங்கினேன்; பாதி பேதை உருவாய்
இருந்தார் - ஒரு கூறு பெண் வடிவா யிருந்தனர் (அதனால் அது நீங்கி),