பாயிருட் படலங் கீண்டு பரிதிகண் விழித்துச் செங்கை
ஆயிரம் பரப்பி முந்நீ ரலைகட னீந்து மெல்லை
மாயிரு ஞாலங் காக்கும் வரகுண னிரவு தங்கள்
நாயகன் பாடற் கீந்த நல்லருட் பரிசில் கேட்டான். |
(இ
- ள்.) பரிதி கண் விழித்து - சூரியன் கண் விழித்து, பாய் இருள்
படலம் கீண்டு - பரந்த இருட்கூட்டத்தைக் கிழித்து, செங்கை ஆயிரம் பரப்பி
சிவந்த கிரணமாகிய ஆயிரங் கரங்களையும் விரித்து, முந் நீர் அலைகடல்
நீந்தும் எல்லை - மூன்று நீர்களையுடைய அலைக்கின்ற கீழைக் கடலை
நீந்தும்பொழுது, மா இரு ஞாலம் காக்கும் வரகுணன் - மிகப்பெரிய
நிலவுலகினைப் புரக்கும் வரகுண பாண்டியன், இரவு - இராப்போதில், தங்கள்
நாயகன் - தங்கள் குலதெய்வமாகிய சோமசுந்தரக்கடவுள், பாடற்கு ஈந்த நல்
அருள் பரிசில் கேட்டான் - பத்திரனது பாடலுக்கு அளித்தருளிய நல்ல
அருட் கொடையைக் கேட்டறிந்தனன்.
உதித்தலைக்
கண் விழித்து என்றும், இருளை யோட்டுதலை
இருட்படலங் கீண்டு என்றும், கதிர் வீசுதலைக் செங்கை பரப்பி என்றும்,
கீழைக்கடலைத் தாண்டி வருதலைக் கடல் நீந்தும் என்றும் கூறியது
குணவணி.கீண்டு : கீழ்ந்து என்பதன் மரூஉ. நீரில் நீந்துவார் கை பரப்புதல்இயல்பாகலின்
அதற்கேற்ப செங்கையாயிரம் பரப்பி முந்
நீரலைகட னீந்து மெல்லை என்றார். மாயிரு, உரிச்சொல்லாகலின் யகரம்
வந்தது. அருட்பரிசில் - அருளாகிய பரிசில்; அருளால் அளித்த பரிசில். (16)
இன்னிசைக் கரசை யிட்ட பலகைமீ திருத்தி மன்னர்
மன்னவ னிவனே யெங்கண் மதுரைநா யகனென் றுன்னி
மின்னிவர் மணிப்பூ ணல்கி விளைநில மிகவு நல்கி
நன்னிதி வெறுப்ப நல்கி வரிசையா னடத்தி* வந்தான். |
(இ
- ள்.) இன் இசைக்கு அரசை - இனிய இசைக்கு அரசனாகிய
பாணபத்திரனை, இட்ட பலகைமீது இருத்தி - இறைவன் இட்டருளிய
அப்பலகைமேல் இருக்கச்செய்து, மன்னர் மன்னவன் - வேந்தர்
வேந்தனாகிய வரகுணதேவன், இவனே எங்கள் மதுரை நாயகன் என்று
உன்னி - இவனே எங்கள் சோமசுந்தரக் கடவுள் என்று கருதி, மின் இவர்
மணிப்பூண் நல்கி - ஒளிபரந்த மணிகள் அழுத்திய அணிகளைக் கொடுத்தும்,
விளை நிலம் மிகவும் நல்கி - விளை நிலங்களை மிகுதியாகத் தந்தும், நல்
நிதி வெறுப்ப நல்கி - நல்ல பொருள்களை (அவன்) உவர்ப்ப அளித்தும்,
வரிசையால் நடத்தி வந்தார் - முறைமையால் (இங்ஙனமே பல நாளும்)
நடத்தி வந்தான்.
சிவனடியாரைச்
சிவனெனவே நினைக்க வேண்டுமென்பது உண்மை
நூற்றுணிபாகலின் அவனை இறைவனாகவே உன்னினன் என்க. வெறுப்ப -
மிக என்றுமாம். (17)
(பா
- ம்.) * வரிசையா நடத்தி.
|