மற்றை வைகலவ் விருவரைப் பஞ்சவன் மதுரைக்
கொற்ற வன்றன தவையிடை யழைத்துநேர் கூட்டிக்
கற்ற வேழிசை கேட்குமுன் கலத்தினும் போந்த
வெற்றி வேன்மதர் நெடுங்கணாள் விறலியை வைதாள். |
(இ
- ள்.) மற்றைவைகல் - மறுநாளில், அவ்விருவரை -
அவ்விருவரையும், பஞ்சவன் மதுரைக் கொற்றவன் - பாண்டியனாகிய
மதுரை மன்னன், தனது அவையிடை அழைத்து - தன் அவையின்கண்
வருவித்து, நேர்கூட்டி - ஒருவருக்கொருவர் நேரில் இருக்குமாறு செய்து,
கற்ற ஏழ் இசை கேட்குமுன் - அவர்கள் கற்ற ஏழு இசைகளையும் பாடுமாறு
ஏவிக் கேட்டற்கு முன்னரே, கலத்தினும் போந்த - மரக் கலத்தினின்றும்
வந்த, வெற்றிவேல் மதர் நெடுங்கணாள் - வெற்றி பொருந்திய வேல்போன்ற
மதர்த்த நீண்ட கண்களையுடையவள், விறலியை வைதாள் - பாணபத்திரன்
மனைவியாகிய பாடினியை இகழ்ந்துரைத்தாள்.
இருவரையும்
என்னும் முற்றும்மை விகாரத்தாற் றொக்கது கலம் -
நாவாய். கலத்தினால் வந்தவளைக் கலத்தினின்றும் வந்தவள் என்றார். (10)
குற்ற மெத்தனை யெத்தனை குணங்கள் யாழ்க் கோலுக்
குற்ற தெய்வம்யா* விசைப்பதெவ் வுயிருடம் புயிர்மெய்
பெற்ற வோசையெவ் வளவவைக் குத்தரம் பேசி
மற்றெ னோடுபா டில்லையேல் வசையுனக் கென்றாள். |
(இ
- ள்.) யாழ்க்கோலுக்கு - வீணைக்கு, எத்தனை குற்றம் -
எவ்வளவு குற்றங்கள்; எத்தனை குணங்கள் - எவ்வளவு குணங்கள்;
உற்ற தெய்வம் யா - பொருந்திய தெய்வங்கள் யாவை; இசைப்பது எவ்வுயிர்
உடம்பு உயிர்மெய் - ஒலிப்பது எந்த உயிரெழுத்து எந்த மெய்யெகுத்து எந்த
உயிர்மெய்யெகுத்து; பெற்ற ஓசை எவ்வளவு - (அவைகட்கு) அமைந்த ஒலி
எவ்வளவின; அவைக்கு உத்தரம் பேசி - அவைகட்கு விடைகூறி, மற்று
எனோடு பாடு - பின் என்னுடன் பாடு வாயாக; இல்லையேல் உனக்கு வசை
என்றாள் - இன்றேல் உனக்கு அது குற்றமாகும் என்று கூறினாள்.
குற்றம்
- செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன; இவை
மரக்குற்றத்தால் வருவன என்பதை,
"நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நில மயங்கும்
பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல் கோள்
நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல்
சேரில்நேர் பண்கள் நிறமயக் கம்படும் சிற்றிடையே" |
(பா
- ம்.) * தெய்வ மேது.
|