II


44திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



வடிவுபோ லுள்ள மெல்லா மாசிருள் புதைய நின்ற
அடிகண்மா ராவா ரெண்ணா யிரவரு மார்த்தார் வேய்ந்த
முடிகெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித்
திடிகெழு கார்போற் குன்றி னிழிந்துவே றிடத்திற் செல்வார்.

     (இ - ள்.) வடிவுபோல் உள்ளம் எல்லாம் மாசு இருள் புதைய நின்ற
அடிகள்மார் ஆவார் எண்ணாயிரவரும் - தம் வடிவு போன்றே உள்ள
முழுதும் அஞ்ஞானமாகிய இருள்மூட நின்ற குரவராவார் எண்ணாயிரவரும்,
ஆர்தார் வேய்ந்த முடிகெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித்து
- ஆத்திமாலையை யணிந்த முடிசூடிய சோமமன்னன் விடுத்த ஓலையைப்
பிரித்துப் படித்து, இடிகெழு கார் போல் - இடிமிக்க முகில்போல, குன்றின்
இழிந்து வேறு இடத்தில் செல்வார் - மலைகளினின்றும் இறங்கி வேறாகக்
குறித்த இடத்திற் செல்வாராயினர்.

     வடிவு அழுக்கால் மூடப்பட்டிருப்பது போன்றே மனம் அறியாமையால்
மூடப்பட்ட என்றார்; புறத்தும் அகத்தும் தூய்மையில்லாதவர் என்றவாறு.
மாசு - கறை, அறியாமை; இருள் மாசு என மாறி அறியாமையாகிய அழுக்கு
எனலுமாம். அடிகள்மார் - சமண குரவர்க்குச் சிறப்பாக வழங்கும் பெயர் :
மார் : பெயர் விகுதி : ஆவார் : முதல் வேற்றுமைச் சொல் கருமையாலும்
ஆரவாரத்தாலும் மலையினின் றிறங்குதலாலும் ‘இடிகெழுகார்போல்’ என்றார்.
தம்மிடத்தின் வேறாகிய குறித்த இடத்தில் என்க. (8)

யாவரு மொருங்கு கூடி யிருள்வழி கொள்வ தேய்ப்பக்
காவல்வல் லரணஞ் சூழ்ந்த காஞ்சிமா நகரத் தெய்திப்
பூவலர் தாரான் கோயிற் புறங்கடை புகுந்து வேந்தன்
ஏவலர் விடுப்ப வுள்போ யிறைமக னிருக்கை புக்கார்.

     (இ - ள்.) யாவரும் ஒருங்குகூடி - அனைவரும் ஒன்று சேர்ந்து,
இருள் வழி கொள்வது ஏய்ப்ப - இருளானது வழிச் செல்வதைப்போல
(நடந்து), காவல் வல் அரணம் சூழ்ந்த காஞ்சிமா நகரத்து எய்தி -
காவலையுடைய வலிய மதில் சூழ்ந்த பெரிய காஞ்சிப்பதியினை அடைந்து,
பூ அலர் தாரான் கோயில் புறங்கடை புகுந்து - ஆத்தி மலரால் விளங்கும்
மாலையை யணிந்த சோழனது அரண்மனையின் வாயிலை அடைந்து,
அவந்தன் ஏவலர் விடுப்ப உள்போய் இறைமகன் இருக்கை புக்கார் -
அரசனுடைய ஏவலாளர் விடுக்க உள்ளே சென்று அரசனிருப்பிடத்தை
யுற்றார்கள்.

     இருள்வழி கொள்வ தேய்ப்ப என்றது இல்பொருளுவமை. ஏவலர் -
வாயில் காப்போர். (9)

மன்னவன் முடிமேற் பீலி வைத்தன ராக்கங் கூற
அன்னவ னவரை நோக்கி வசியமுன் னாறும் வல்லீர்
தென்னனை யாபி சாரஞ் செய்துயிர் செகுத்தா லுங்கட்
கென்னது நாடு பாதி தருவல்போ யியற்று மென்றான்.