குடங்கை நீரும் பச்சிலையு மிடுவார்க் கிமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் மதுரைப் பரமேட்டி
படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் கையிற் படுதலைகொண்
டிடங்க டோறு மிரப்பாயென் றெசு வார்க்கென் பேசுவனே. |
(இ
- ள்.) குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு - அகங்கை
யளவான நீரையும் பசி இலையையும் இட்டு வழிபடுவார்க்கும், இமையாக்
குஞ்சரமும் - ஐராவதமும், படம் கொள் பாயும் - படத்தைக் கொண்ட
அனந்தசயனமும், பூ அணையும் - தாமரை மலர்த் தவிசுமாகிய இவற்றை,
மதுரைப் பரமேட்டி தருவாய் - மதுரையில் எபந்தருளிய பெருமானே! நீ
அளித்தருள்வாய்; படம்கொள் பாயும் பூ அணையும் தருவாய் - (அவருக்கு)
அவற்றை அருள்பவனாகிய நீயே, கையில் படுதலைகொண்டு - திருக்கரத்தில்
கபாலத்தை ஏந்தி, இடங்கள்தோறும் இரப்பாய் என்று - இல்லங்கள்தோறுஞ்
சென்று ஏற்பாயென்று கூறி, ஏசுவார்க்கு என் பேசுவனே - பழிக்கின்ற
புறச்சமயிகளுக்கு (யான்) யாது கூறுவேன்.
தேவர்கள்
இமையா நாட்டம் உடையராகலின் தேவர்க்கரசனது
யானையை அமையாக் குஞ்சரம் என்றார். குஞ்சரமும் பாயும் அணையும்
தருவாய் என்றது இந்திரன் பதமும் திருமால் பதமும் பிரமன் பதமும்
தருவாய் என்றபடி. குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு அவை
தருவாய் என்றது எவ்வளவு நல்குரவாளரும் இறைவனை வழிபடுதற்கு
இழுக்கின்று என்பதனையும், அடியார்கள் அன்புடன் இடும் அத்துணை
நீருக்கும் பச்சிலைக்குமே இறைவன் அவ்வளவு பெரிய பதங்களை யளிக்கும்
பேரருளாளன் என்பதனையும், இந்திரன் மால் பிரமன் என்போ ரெல்லாம்
அங்ஙனம் இறைவனை வழிபட்டே அப்பதவிகளை அடைந்தன ராவர்
என்பதனையும் காட்டுகிறது. வழிபடுவார்க்கு அத்துணைப் பெருஞ்
செல்வங்களை ஈயும் நீ படுதலை கொண்டிரப்பது ஆன்மாக்களின் உடல்
பொருள் ஆவிகளை யெல்லாம் ஏன்றுகொண்டு அவற்றுக்கு அருள் புரியும்
காரணத்தால் என்பதனை அறியாது புறச்சமயிகள் நின்னைப் பழித்துரைப்பர்.
அவர்க்குக் கூறும் விடை யாதுமில்லை யென்க. (34)
தேனார் மொழியார் விழிவழியே செல்லா தவர்க்கே வீடென்று
நாணா வேதப் பொருளுரைத்தாய் நீயே மதுரை நம்பரனே
நானா வேதப் பொருளுரைத்தாய் நீயே பாதி நாரியுரு
ஆனா யென்று பிறர்பழித்தா லடியேன் விடையே தறைவேனே. |
(இ
- ள்.) தேன் ஆர் மொழியார் விழி வழியே செல்லாதவர்க்கே
தேனின் சுவை போலுஞ் சுவைநிரம்பிய சொற்களையுடைய மகளிரின்
பார்வையால் மயங்கி அவர் பின்சென்று அலையாதவர்க்கே, வீடு என்று -
வீடுபேறு உரியதென்று, நானாவேதப் பொருள் - பலவகைப் பட்ட
மறைப்பொருளை விரித்து, மதுரை நம்பரனே நீயே உரைத்தாய் -
மதுரயிலெழுந்தருளிய நம்பரனே நீயே கூறியருளினாள்; நானா வேதப்
|