II


யானையெய்த படலம்45



     (இ - ள்.) மன்னவன் முடிமேல் பீலி வைத்தனர் ஆக்கம்கூற -
(புக்கவர்) சோழனுடைய முடியின்மேல் மயிற்றோகையை வைத்து ஆசிமொழி
கூற, அன்னவன் அவரை நோக்கி - அம்மன்னன் அச்சமண குரவர்களைப்
பார்த்து, வசியம் முன் ஆறும் வல்லீர் - வசியம் முதலாகிய ஆறு
தொழிலிலும் வல்லீரே, தென்னனை ஆபிசாரம் செய்து உயிர் செகுத்தால் -
(நீவிர்) விக்கிரம பாண்டியனை மாரணவேள்வி செய்து கொல்லுவீரேல்,
உங்கட்கு என்னது நாடு பாதி தருவல் - உங்களுக்கு என்னுடைய நாட்டிற்
பாதி தருவேன்; போய் இயற்றும் என்றான் - சென்று அதனைச்
செய்யுங்களென்று கூறினான்.

     வசிய முன்னாறு எல்லாம் வல்ல சித்தரான படலத்திற் கூறப் பட்டன.
ஆபிசாரம - அபிசார வேள்வி. என்னது : னகரம் விரித்தல். நாடுபாதி -
நாட்டிற் பாதி. (10)

தவம்புரிந் தவமே செய்வார் தாமதற் குடன்பட் டேகி
நிவந்ததெண் டிரைநீர்ப் பாலி நெடுங்கரைக் காத மூன்றிற்
கவர்ந்தகன் சாலை கோலி யோசனை யகலங் கல்லி
அவம்படு வேள்விக் குண்டங் கோணமெட் டாகக் கண்டார்.

     (இ - ள்.) தவம் புரிந்து அவமே செய்வார் தாம் - (புறத்திலே) தவஞ்
செய்து (அகத்தில்) அவமே செய்வாராகிய அவர்தாம், அதற்கு உடன்பாடு
ஏகி - அச்செய்கைக்கு உடன்பட்டுச் சென்று, நிவந்த தெண்திரை நீர்ப்பாலி
நெடுங்கரை - உயர்ந்து வரும் தெள்ளிய அலைபொருந்திய நீரையுடைய
பாலியாற்றின் நீண்ட கரையில், காதம் மூன்றில் கவர்ந்த அகன்சாலை
கோலி - மூன்று காத அளவினை அகப்படுத்திய அகன்ற வேள்விச்
சாலையைக் கோலி, யோசனை அகலம் கல்லி - (அதில்) ஒரு யோசனை
அகலம் தோண்டி, எட்டுக் கோணமாக அவம்படு வேள்விக் குண்டம்
கண்டார் - எண் கோணமாகப் பழிவிளையும் வேள்விக்குண்டத்தினைச்
செய்தனர்.

     தவம்புரிவார் போன்று அவமே புரிவாரென்க. அவம் - தவத்திற்கு
மாறாய தீச்செய்கை;

"தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வா ராசையுட் பட்டு"

என்பது தமிழ்மறை. மூன்றில் - மூன்றினை. கவர்ந்த என்னும் பெயரெச்சத்து
அகரந் தொக்கது. கண்டார் என்பதனை எச்சமாக்கலுமாம். (11)

விடம்பொதி காட்டம் பெய்து நிம்பநெய் விராய நஞ்சின்
உடம்புடை யுயிரின் கோழுன் கறிப்பொடி யூறு மெண்ணெய்
அடம்பட வாயங் காந்த வெரிக்குழி புதையப் பெய்து
கொடும்பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார்.

     (இ - ள்.) விடம்பொதி காட்டம் பெய்து - (அங்ஙனஞ் செய்து) நஞ்சு
பொதிந்த விறகினையிட்டு, நிம்பநெய் விராய - வேம்பின் நெய் கலந்த,
நஞ்சின் உடம்பு உடை உயிரின் கோழ்ஊன் - நஞ்சு பொருந்திய