|
சில்லரிதுடி
எனப் பாடங்கொண்டு, சில்லரியாவது ஒலிக்கும் ஒரு
வகைப்பறை யென்பாரும் உளர். பார்வை - விலங்குகளைப் பிடித்தற்கு
வளர்க்கப்பட்ட இனமாகிய விலங்குகள். பயில் விளி - அவை பயின்ற
அழைப்பொலி. மையல் மான் - யானை. நன்கு வளைத்து என்பார்
"வில்லிற வலித்து வாங்கி" என்றார். (14)
|
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
செறிந்த
மான்மு றிந்த தாள்சி தைந்த சென்னி செம்புனற்
பறிந்த வாறு வெண்ணி ணம்ப ரிந்து வீசு கையிறா
மறிந்த வேழு யர்ந்த வேழ மாண்ட வெண்கு வல்லியம்
பிறிந்த வாவி யோடும் வாய்பி ளந்த வாய்வி ழுந்தவே. |
(இ
- ள்.) செறிந்த மான் - நெருங்கிய மான்கள், தாள்முறிந்த; (சில)
கால் முறிந்தன; சென்னி சிதைந்த - (சில) தலை சிதைந்தன - செம்புனங்
ஆறு பறிந்த - குருதி ஆறு ஓடியது; ஏழு உயர்ந்த வேழம் - ஏழு முழ
உயர்ந்த யானைகள், வீசு கை இறா - வீசுகின்ற துதிக்கை அற்று,
வெண்நிணம் பரிந்து - வெள்ளிய நிணம் சிந்தி, மறிந்த மாண்ட - (செல்நெறி)
தடைப்பட்டு மடிந்தன; எண்கு வல்லியம் - கரடிகளும் புலிகளும், பிறிந்த
ஆவியோடும் - நீங்கின உயிரோடும், வாய் பிளந்தவாய் விழுந்த - வாய்
பிளந்தனவாகி விழுந்தன.
பறிந்தது
என்பது துவ்வீறு தொக்கது. செம்புனல் ஆறு பறிந்த தென்க.
யானை ஏழுமுழம் உயர்ந்திருத்தல் உத்தம இலக்கணம். வேழம் மறிந்தன
எண்கு மாண்டன வல்லியம் விழுந்தன என்றுரைத்தலுமாம். (15)
தொட்ட புற்கி
ழங்கு வாடை தொடவி ரைந்து கண்ணியுட்
பட்ட வம்பொ றித்து வைத்த பார்வை வீழ்ந்த டுத்தவுங்
கட்டி யிட்ட வலையி ழைத்து ஞமலி கௌவ நின்றவும்
மட்டி லாத வொட்டி நின்ற மள்ளர் வேலின் மாய்ந்தவே. |
(இ
- ள்.) தொட்ட புல்கிழங்கு வாடை தொட - தோண்டிய புல்லின்
மணமும் கிழங்கின் மணமும் வீச, விரைந்து கண்ணியுள் பட்டவும் -
விரைந்து சென்று வலையுட்பட்டனவும், பொறித்து வைத்த பார்வை வீழ்ந்து
அடுத்தவும் - செய்து வைத்த பார்வை விலக்கினை விரும்பிவந்து
பொருந்தியனவும், கட்டி இட்ட வலை பிழைத்து - கட்டி வைத்த
வலையினின்றுந் தப்பி, ஞமலி கௌவநின்றவும் - நாய்கள் கௌவ
நின்றனவுமாகிய, மட்டிலாத - அளவிறந்த விலங்குகள், ஒட்டி நின்ற மள்ளர்
வேலின் மாய்ந்தவே - கிட்டிநின்ற வீரர்களின் வேற்படையால் மாய்ந்தன.
கண்ணியின்
நடுவே புல்லும் கிழங்கும் தோண்டி வைத்திருக்க
அவற்றின் மணத்தால் ஈர்க்கப்பட்டுவந்து கண்ணியுட் பட்டன என்க.
பொறித்து வைத்த பார்வை - பார்வை விலங்குகளாக இயற்றிவைத்த
உருக்கள். பட்ட,, அடுத்த. நின்ற என்பன வினையாலணையும் பெயர்கள்.
மட்டிலாத வேலின் என இயைத்தலுமாம். மாய்ந்த : அன்பெறாத பலவின்பால்
முற்று. (16)
|