II


458திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பட்ட மாவொ ழிந்து நின்ற மறவி லங்கு பல்சில
வட்ட மாவ ளைந்து டுத்த வலையி னுந்தி யப்புறத்
தெட்டி நின்ற கொலைஞர்மே லெதிர்ந்து மீள்வ வெயில் வளைந்
தொட்டி னாரை மலையு மாப்பொ றிக்க ணங்க ளொத்தவே.

     (இ - ள்.) பட்டமா ஒழிந்துநின்ற - இறந்தொழிந்த விலங்குகள் நீங்க இறவாது நின்ற, மறவிலங்கு பல்சில - பலவும் சிலவுமாய கொடிய விலங்குகள்,
வட்டமா வளைந்து உடுத்த - வட்டமாக வளைந்து சூழ்ந்த, வலையின் உந்தி
- வலையினின்றுந் தாவி, அப்புறத்து எட்டிநின்ற - புறத்தே அடுத்துநின்ற,
கொலைஞர்மேல் எதிர்ந்து மீள்வ - வேட்டுவ மாக்கள் மீது பாய்ந்து மீள்வன,
எயில் வளைந்து - மதிலைச் சூழ்ந்து, ஒட்டினாரை - எதிர்த்த பகைவரை,
மலையும் - பொராநிற்கும், மாப் பொறிக் கணங்கள் ஒத்த - பொறிகளாகிய
விலங்குக் கூட்டங்களை ஒத்தன.

     ஒழிந்து - ஒழிய; எச்சத்திரிபு. மாப்பொறி - விலங்குப்பொறி. (17)

வல்லி யந்து ளைத்த கன்று மான்று ளைத்த கன்றுவெங்
கல்லி யங்கு மெண்கி னைத்து ளைத்த கன்று கயவுவாய்
வெள்ளி பந்து ளைத்து மள்ளர் விட்ட வாளி யிங்ஙனஞ்
சொல்லி னுங்க டிந்து போய்த்து ணித்த மாவ ளப்பில.

     (இ - ள்.) மள்ளர்விட்ட வாளி - வீரர்விட்ட வாளிகள், சொல்லினம்
கடிந்துபோய் - முனிவரிடுஞ் சாப மொழியினும் விரைந்து சென்று, வல்லியம்
துளைத்து அகன்று - புலிகளைத் துளைத்துருவியுயம், மான் துளைத்து
அகன்று- மான்களைத் துளைத்துருவியும், வெங்கல் இயங்கும் எண்கினைத்
துளைத்து அகன்று - வெப்ப மமைந்த மலைகளில் இயங்கும் கரடிகளைத்
துளைத் துருவியும், கயவுவாய் வெல்இபம் துளைத்து - பெரிய வாயினை
யுடைய வெற்றி பொருந்திய யானைகளைத் துளைத்தும், இங்ஙனம் துணித்தமா
அளப்பில - இவ்வாறு துண்டித்த விலங்குகள் அளவிறந்தன.

     கயவு - பெருமை;

"தடவும் கயவும் நளியும் பெருமை"

என்பது தொல்காப்பியம். சொல் - முனிவரின் சாபமொழி; அஃது அக்
கணத்தே விரைந்து சென்று தாக்குதலின் உவமமாயிற்று;

"சொல்லொக்குங் கடிய வேதச் சுடுசரம்"

எனக் கம்பநாடர் கூறுதலுங் காண்க. (18)

மடுத்த வாளி யிற்பி ழைத்து வலையை முட்டி யப்புறத்
தடுத்த மானை வௌவி நாய லைத்து நின்ற வாதிநாள்
உடுத்த பாச வலையி னின்று முய்கு வாரை யொய்யெனத்
தடுத்த வாவி ளைத்து நின்ற தைய லாரை யொத்தவே.