II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்459



     (இ - ள்.) மடுத்த வாளியில் பிழைத்து - பாய்ந்த வாளிகளினின்றுந்
தப்பி, வலையை முட்டி அப்புறத்து அடுத்த மானை - வலையை மோதி
அப்புறஞ்சென்ற மான்களை, வௌவி அலைத்துநின்ற நாய் - கௌவி வருத்தி
நின்றனவாகிய நாய்கள், ஆதிநாள் உடுத்த பாசவலையினின்றும் உய்குவாரை
- முன்னாளிலே சூழ்ந்த பாசமாகிய வலையினின்றும் தப்பிப் பிழைத்துச்
செல்லும் பெரியோரை, ஒய்யெனத் தடுத்து - விரைந்து தடுத்து, அவா
விளைத்து நின்ற - ஆசையை விளைத்து நின்ற, தையலாரை ஒத்தவே -
பெண்களை ஒத்தன. அலைத்து நின்ற நாய் என மாறுக. ஆதிநாள் என்றது
அனாதி காலாமாக என்றபடி. ஒய்யென : விரைவுக் குறிப்பு.

"பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலைபற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற வுறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள வுளவே"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுளோடு இஃது ஒப்புநோக்கற்
பாலது. (19)

மதியை நேர்வ கிர்ந்து கௌவி யனைய வான்ம ருப்புவெங்
கதிய வேழ மீது தாது காலு நீல முகையினீள்*
நுதிய வேனு ழைந்த செம்பு ணூழில் வீழு முதிரநீர்
முதிய கான வரையின் மீது மொய்த்த தீயை யொத்தவே.

     (இ - ள்.) மதியை நேர் வகிர்ந்து கௌவியனைய - சந்திரனை இரு
கூறாகப் பிளந்து கௌவினாய்போன்ற, வான் மருப்பு வெம்கதிய வேழம் மீது
- வெள்ளிய மருப்பினையும் வெய்ய நடையைமுடைய யானையின் மேல்,
தாதுகாலும் நீலமுகையின் - மகரந்தஞ் சிந்தும் நீலோற்பலத்தின் அரும்பு
போல (நஞ்சுபூசிய), நீள்நுதிய வேல் நுழைந்த - நீண்ட முனையையுடைய
வேற்படை ஊடுருவியதா லாகிய, செம்புண் நூழில் வீழும் உதிரநீர் - பசும்
புண்ணின் தொளையினின்று பொழியுங் குருதி நீர், முதிய கான வரையின்மீது
-முற்றிய மரங்களையுடைய காடு அடர்ந்த மலையின்மேல், மொய்த்த தீயை
ஒத்த - சூழ்ந்த நெருப்பினை ஒத்தது.

     கதிய, நுதிய, முதிய என்பன குறிப்புப் பெயரெச்சங்கள். நுழைந்த :
காரணப்பொருளில் வந்த பெயரெச்சம். நூழில் - துளை. ஒத்தது : துவ்வீறு
தொக்கது; குருதிகள் ஒத்தன எனலுமாம்;

"வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்குப் போன்றவே"

என்னும் களவழிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (20)


     (பா - ம்.) * முகையினின்.