II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்463



முற்படு தூசி யாக நடக்கின்ற முரட்காற் பன்றி
மற்படு சேனை நேரே வருகின்ற மன்னர் மன்னன்
வெற்படு தடந்தோள் வன்றாள் வீரர்மேற் சீறிச் செல்லப்
புற்பட வொதுங்கி வீரர் பெய்தன ரப்பு மாரி.

     (இ - ள்.) முற்படு தூசியாக நடக்கின்ற - முன்னணியாக நடக்கின்ற,
முரண் கால் பன்றி மல்படுசேனை - முருட்டுக் கால்களையுடைய பன்றியாகிய
வலிமிக்க படை, நேரே வருகின்ற மன்னர் மன்னன் - எதிரே வருகின்ற
வேந்தர் வேந்தனாகிய பாண்டியனது, வெற்பு அடு தடந்தோள் வன் தாள்
வீரர்மேல் - மலையைப் பொருது வென்ற பெரிய தோள்களையும் வலிய
தாள்களையுமுடைய வீரர்கள்மேல், சிறிச்செல்ல - சினந்து செல்ல, வீரர்
பிற்பட ஒதுங்கி - அவ்வீரர்கள் பின்னே ஒதுங்கி நின்று, அப்பு மாரி
பெய்தனர் - அம்பு மழையினைப் பொழிந்தனர்.

     தூசி - முன்னே செல்லும் படை. நடக்கின்ற சேனை வீரர்மேற் செல்ல
அவர் அப்புமாரி பெய்தனர் என்க. அப்பு, அம்பு என்பதன் வலித்தல். (28)

சொரிந்தன சோரி வெள்ளஞ் சொரிந்தன வீழ்ந்த யாக்கை
சரிந்தன குடர்க ளென்பு தகர்ந்தன வழும்பு மூளை
பரிந்தன சேனங் காகம் படர்ந்தன வுயிரு மெய்யும்
பிரிந்தன வேன நின்ற பிறைமருப் பேன வீரர்.

     (இ - ள்.) சோரி சொரிந்தன வெள்ளம் சொரிந்தன - குருதிகள்
பொழிந்து வெள்ளமாகப் பெருகின; யாக்கைவீழ்ந்த - உடல்கள் வீழ்ந்தன;
குடர்கள் சரிந்தன - குடர்கள் சரிந்தன; என்பு தகர்ந்தன - எலும்புகள்
முறிந்தன; வழும்பு மூளை பரிந்தன - வழும்பும்்மூளையும் அற்றன; சேனம்
காகம் படர்ந்தன - பருந்துங் காகமும் பரவின; ஏனம் உயிரும்
மெய்யும்பிரிந்தன - பன்றிகள் (இங்ஙனம்) உயிர்வேறு உடல் வேறாகப்
பிரிந்தன; நின்ற பிறைமருப்பு ஏன வீரர் - பிழைத்து நின்ற பிறைபோலும்
கோட்டினையுடைய பன்றிவீரர்.

     பின்னுள்ள சொரிந்தன என்பது பெருகின என்னும் பொருட்டு. வீரர்
என்பது வருஞ்செய்யுளில் உள்ள சிதைத்தனர் முதலிய வினைகளைக்
கொள்ளும். (29)

பதைத்தன ரெரியிற் சீறிப் பஞ்சவன் படைமேற் பாய்ந்து
சிதைத்தனர் சிலரைத் தள்ளிச் செம்புனல் வாயிற் சோர
உதைத்தனர் சிலரை வீட்டி யுரம்புதை படக்கோ டூன்றி
வதைத்தனர் சிலரை நேரே வகிர்ந்தனர் சிலரை மாதோ.

     (இ - ள்.) எரியில் சீறிப் பதைத்தனர் - நெருப்பைப் போலச் சினந்து
உடல் பதைத்து, பஞ்சவன் படைமேல் பாய்ந்து சிலரைச் சிதைத்தனர் -
பாண்டியன் படைமீதுபாய்ந்து சிலரைச் சிதைத்தார்கள்; சிலரைத் தள்ளி -
சிலரைக் கீழே தள்ளி, வாயில் செம்புனல் சோர உதைத்தனர் - அவர்
வாயினின்றும் குருதிபொழியுமாறு உதைத்தார்கள்; சிலரை வீட்டி - சிலரை