|
உடல் கார்ஏனம் ஒன்று
உறை - செறிந்த இருள் போன்ற கரிய
உடலையுடைய ஒரு பன்றி உறையும், துறையில் - நீர்த்துறையின்கண், வீரம்
தாங்கு இரு மடங்கல் - வீரத்தை அணியாகத் தாங்கிய இரண்டு சிங்கங்கள்,
நீர்க்குத் தலைப்பட அஞ்சும் - நீர் பருகுதற்கு வர அஞ்சா நிற்கும்.
முழை
போலும் வாயென்பார் 'தூங்கிருள் வாய்' என்றார். வறுவாய் -
உணவு பெறாதிருக்கும் வாய். வீங்கிருள் போலும் காருடல் என்க. இரு
சிங்கம் உறையுந் துறையில் ஓர் கேழல் அஞ்சாது வந்து பருகி ஏதமின்றி
மீளும்; ஓர் ஏனம் உறையுந் துறையில் இரு சிங்கம் தலைப்படவும் அஞ்சும்
எனத் தன் குலத்திற்குரிய வீரத்தையும் வெற்றியையும் எடுத்துக் காட்டிற்று.
அன்று, ஏ : அசைகள். (35)
அத்திட மரபின்
வந்து பிறந்துளே னாத லாலே
கைத்திடு தாரான் வீரங் கவர்ந்திசை திசையும் வானும்
வைத்திட வல்லே னன்றி மடிந்திட வல்லே னாகிற்
பொய்த்திடு முடம்பே யன்றிப் புகழுடம் பழிவ துண்டோ. |
(இ
- ள்.) அ திடம் மரபின் வந்து பிறந்துளேன் - யான் அத்தகைய
வீரம் வாய்ந்த குடியில் (மேலைத் தவத்தால்) வந்து பிறந்தேன்; ஆதலாலே -
ஆகையால், கைத்திடு தாரான் வீரம் கவர்ந்து - கைப்பினையுடைய வேப்ப
மலர் மாலையையணிந்த இப்பாண்டியனுடைய வீரத்தைக் கொள்ளை கொண்டு,
இசை திசையும் வானும் வைத்திட வல்லேன் - எனது புகழை எட்டுத்
திக்குகளிலும் விண்ணுலகினும் நாட்டுதற்கு வல்லவனாவேன்; அன்றி -
அங்ஙனஞ் செய்யாது, மடிந்திட வல்லேனாகில் - புறங்கொடாது
மடியவல்லேனானால், பொய்த்திடும் உடம்பே அன்றி - என்றும் அழியுந்
தன்மையையுடைய இப்பூதவுடம்பு அழிவதேயன்றி, புகழ் உடம்பு அழிவது
உண்டோ - புகழுடம்பும் அழிவதுண்டோட? (இல்லை யென்றபடி.)
கைக்கும்
பூவாலாகிய மாலையைக் கைக்கும் மாலை என்றார்.
பொய்த்திடும் உடம்பு - நிலைபெறாத உடம்பு; என்றேனும் அழியும் உடம்பு.
புகழ் உடம்பு - புகழாகிய உடம்பு. ஓகாரம் எதிர் மறைப் பொருட்டு. (36)
|
[கலிநிலைத்துறை]
|
நீநில்
லெனத்தன் பெடைதன்னை நிறுத்தி நீத்தென்
கானில் லெனவாழ் கருமாவின் கணங்க ளெல்லாம்
ஊனில் லுயிருண் டனமென்றினி யோடல் கூடற்
கோனில் லெனவார்ப் பவன்போலக் கொதித்து நேர்ந்தான். |
(இ
- ள்.) நீ நில் என - அஞ்சுகின்ற நீ நிற்கக் கடவை என்று கூறி,
தன் பெடைதன்னை நிறுத்தி - தனது பெண் பன்றியை நிறுத்தி, நீத்து -
அதனின் நீங்கி, என் கான் இல் என வாழ் - எனது காட்டினை இல்லமாகக்
கொண்டு வாழ்ந்த, கருமாவின் கணங்கள் எல்லாம் - பன்றிக் கூட்டங்கள்
முழுதையும், ஊன் நில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் - உடம்பிலுள்ள
உயிரைக் கவர்ந்தனம் என்று மகிழ்ந்து இனி ஓடற்க; கூடற்கோன் நில் என
|