விறனவில் பேட்டை விளிப்பது வேந்தர்க்
கறனல வென்றவ னாள்வினை மள்ளர்க்
கிறைமக னான சருச்சர னென்றோர்
மறமக னேர்ந்தம ராட வளைந்தான். |
(இ
- ள்.) விறல் நவில் பேட்டை - வீரங்கூறி எதிர்த்த அப்பெண்
பன்றியை, விளிப்பது வேந்தர்க்கு அறன் அல என்று - மாய்ப்பது
மன்னருக்கு அறமல்ல என்று கருதி, அவன் - அம்மன்னனுடைய, ஆள்
வினை மள்ளர்க்கு இறைமகனான - போர்த் தொழிலையுடைய வீரர்க்குத்
தலைவனான, சருச்சரன் என்ற ஓர் மற மகன் - சருச்சரனென்ற
பெயரினையுடைய ஒரு வேடன், நேர்ந்து அமர் ஆட வளைந்தான் -
எதிர்த்துப் போர் புரிதற்குச் சூழ்ந்தான்.
விளிப்பது
- விளியச் செய்வது; சொல்வது. என்ற என்பதன் அகரம்
தொக்கது. (47)
நனிபொழு தாடம ராடின னஞ்சிற்
கனிசின வன்பெடை காய்சின வேடத்
தனிமக னைத்தரை வீட்டின தாற்றல்
இனியிலை யென்ன விளைத்துயிர் சோர்வான். |
(இ
- ள்.) நனி பொழுது ஆடு அமர் ஆடினன் - நெடும் பொழுது
வெற்றியைத் தரும் போர் புரிந்தான்; நஞ்சில் கனி சினவன் பெடை -
நஞ்சினும் முதிர்ந்த சிநத்தையுடைய வலிய அப் பெண் பன்றி, காய்சின
வேடத் தனி மகனை - காய்கின்ற சினத்தையுடைய வேடனாகிய ஒப்பற்ற
சருச்சரனை, தரை வீட்டினது - தரையில் வீழ்த்தியது; இனி ஆற்றல் இலை
என்ன - இனிப் போர் புரிய வலியில்லை என்று சொல்லுமாறு, இளைத்து
உயிர் சோர்வான் - மெலிந்து உயிர் சோர்வானாகிய அவன்.
ஆடமர்
- வென்றியைச் செய்யும் போர்; கொல்லும் போர் என்றுமாம்.
(48)
இரும்புசெய் தண்டினை யிம்மென வோங்கிப்*
பொரும்பெடை சென்னி புடைத்து விளிந்தான்
விருந்தின ராயிரு வோரும் விமானத்
தருந்திறல் வான மடைந்தன ரன்றே. |
(இ
- ள்.) இரும்பு செய் தண்டினை - இரும்பாற் செய்த தண்டத்தை,
இம்மென ஓங்கி - விரைந்து ஓங்கி, பொரும் பெடை சென்னி புடைத்து
விளிந்தான் - போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்;
இருவோரும் - அவ்விருவரும், விமானத்து - விமானத்திலேறி, அருந்திறல்
வானம் விருந்தினராய் அடைந்தனர் - வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச்
சென்றனர்.
(பா
- ம்.) * ஓச்சி.
|