II


பன்றிக்குட்டிக்கு மந்திரிகளாக்கிய படலம்481



என்று நாயக னாயகிக் கிறைகொடுத தியம்பி
அன்று மீனவன் கனவில்வந் தரசகேள் பன்றிக்
குன்றி லேனமா முகத்தராய்ப் பன்னிரு குமரர்
வென்றி வீரராய் வைகுநர் மிக்கறி வுடையார்.

     (இ - ள்.) என்று நாயகன் நாயகிக்கு இறை கொடுத்து இயம்பி -
என்று இங்ஙனம் இறைவன் இறைவிக்கு விடை கூறியருளி, அன்று மீனவன்
கனவில் வந்து - அன்று பாண்டியன் கனவின்கண் வந்து, அரச கேள் -
மன்னனே கேட்பாயாக; பன்றிக்குன்றில் - பன்றி மலையில், மா ஏன
முகத்தராய் - பெரிய பன்றி முகத்தினையுடையராய், வென்றி வீரராய் -
வெற்றிமிக்க வீரர்களாய், பன்னிரு குமரர் வைகுநர் - பன்னிரண்டு
மைந்தர்கள் இருக்கின்றனர்; மிக்க அறிவு உடையார் - அவர் நிரம்பிய
அறிவினையுடையராவர்.

     இறை - விடை. மிக்க என்பதன் அகரம் தொக்கது. (8)

அவரை நின்கடைக் கமைச்சராக் கோடியென் றளவில்
சிவப ரஞ்சுட ரருள்செயச் செழியர்கோ வேந்தன்
கவல ருங்களிப் புடையனாய்க் கண்மலர்ந் தெழுமான்
தவழ்நெ டுந்திரைக் கருங்கட றத்திநீந் தெல்லை.

     (இ - ள்.) அவரை - அம்மைந்தர்களை, நின் கடைக்கு அமைச்சராக்
கோடி என்று - நினது வாயிலுக்கு அமைச்சராகக் கொள்ளக் கடவையென்று,
அளவு இல் சிவபரஞ் சுடர் அருள்செய - அளவிறந்த பரஞ்சோதியாகியய
சிவபெருமான் அருளிச் செய்ய, செழியர் கோ வேந்தன் - பாண்டியர் பெரு
வேந்தனாகிய இராசராசன், கவல் அருங்களிப்பு உடையனாய் -
கவற்சியில்லாதமகிழ்ச்சியுடையனாய், கண் மலர்ந்து - துயிலுணர்ந்து, எழுமான்
- (சூரியன் தேரிற் பூட்டிய) ஏழு குதிரைகளும், நெடுந்திரை தவழ் கருங்கடல்
- நெடிய அலைகள் தவழுங் கரிய கீழைக்கடலை, தத்தி நீந்து எல்லை -
தாவி நீந்தும் வைகறைப் பொழுதில்.

     கடை என்றது ஈண்டு அரண்மனை அல்லது வினைசூழ் மன்றைக்
குறிக்கும். கோவேந்தன் - பெருவேந்தன். (9)

மாண்ட கேள்விசான் மந்திரர்க் குணர்த்தியம் மலைமேற்
காண்ட கேனமா வீரரைக் கொணர்கெனக் கருணை
பூண்ட காவல னமைச்சரும் போயவர்க் கண்டு
வேண்ட வீரரு மீண்டினார் மீனவன் றிருமுன்.

     (இ - ள்.) மாண்ட கேள்வி சால் மந்திரர்க்கு உணர்த்தி -
மாட்சிமைப்பட்ட கேள்வி நிறைந்த மந்திரிகளுக்கு (அக்கனவினை) அறிவித்து,
அம்மலை மேல் அப்பன்றி மலையிலுள்ள, காண்தகு மா ஏன வீரரைக்
கொணர்க என - அழகு பொருந்திய பெருமைமிக்க அப்பன்றி வீரரைக்
கொணர்திர் என்று கட்டளையிட, கருணை பூண்ட காவலன்