|
அமைச்சரும் போய்
- அருளையே தனக்கு அணிகலமாகப் பூண்ட அம்
மன்னனுடைய மந்திரிகள் அங்குச் சென்று, அவர்க் கண்டு வேண்ட -
அவரைக் கண்டு வருமாறு வேண்ட, வீரரும் மீனவன் திருமுன் ஈண்டினார்
- அவ்வீரர்களும் பாண்டியன் திருமுன் வந்தனர்.
கொணர்கென
: அகரந் தொகுத்தல். கருணை பூண்ட காவலன்
அமைச்சர் என்பதற்கு அரசன் ஆணையை மேற்கொண்ட அமைச்சர்
என்றுரைத்தலும் பொருந்தும். (10)
வந்திறைஞ்சிய வராகமா மைந்தரை நேர்கண்
டந்த மில்களிப் படைந்துவேந் தமைச்சியற் கிழமை
தந்துவேறுபல் வரிசையுந் தக்கவா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர். |
(இ
- ள்.) வந்து இறைஞ்சிய மாவராக மைந்தரை - அங்ஙனம் வந்து
வணங்கிய பெருமை பொருந்திய அப்பன்றி வீரரை, வேந்து -
இராசராசபாண்டியன், நேர் கண்டு அந்தம்இல் களிப்பு அடைந்து - எதிர்
கண்டு அளவில்லாத மகிழ்ச்சியுற்று, அமைச்சு இயல் கிழமை தந்து -
அமைச்சியல் உரிமையை நல்கி, பல்வேறு வரிசையும் தக்கவா நல்கி - பல
வேறு வரிசைகளையுந் தக்கவாறு கொடுத்து, கந்து சீறிய கடகரிக் கைதவன்
- கட்டுத்தறியைச் சினந்த மத யானையையுடைய பாண்டியன், பின்னர் -
பின் (அவர்க்கு.) தக்கவா - தகுதிக் கேற்றவாறு; றுவ்வீறு தொக்கது. (11)
பழைய மந்திரக் கிழார்மடப் பாவைபோல் வாரை
விழவு சால்கடி மங்கலம் விதியினாற் புணர்த்தி
அழகி தாமென நடத்தினா னனையரும் வீரக்
கழலி னாற்கொரு கவயமுங் கண்ணுமாய் நடப்பார். |
(இ
- ள்.) பழைய மந்திரக் கிழார் மடப்பாவை போல் வாரை
- முன்னரே, மந்திரக் கிழமையுடைய அமைச்சர் பெற்ற இளமை வாய்ந்த
பதுமை போன்ற பெண்களை, விதியினால் - மறைநூல் விதிப்படி, விழவு
சால் கடிமங்கலம் புணர்த்தி - சிறப்பு மிக்க கடிமணம் செய்வித்து, அழகிது
ஆம் என நடத்தினான் - (பார்த்தவர்) அழகிது என்று சொல்லுமாறு
நடத்தினான்; அனையரும் வீரக் கழலினாற்கு - அவ்வீரர்களும் வீரக்
கழலையணிந்த பாண்டியனுக்கு, ஒரு கவயமும் கண்ணுமாய் நடப்பார் -
ஒப்பற்ற கவசமுங் கண்ணும்போல நடப்பாராயினர்.
பாவைபோல்வாரை
மங்கல விதியினாற் சேர்த்து என்றுரைப்பாருமுளர்.
அரசற்கு இடையூறு வராது தடுத்தலின் கவயம் போன்றும், மேல்வரக்
கடவனவற்றை முன் அறிந்து தெரிவித்தலின் கண் போன்றும் நடப்பார் என்க;
| "சூழ்வார் கண்ணாக
வொழுகலான்" |
என முப்பால்
கூறுவதுங் காண்க. (12)
|