[-
வேறு]
|
உடம்பா
றிரண்டிற் குயிரொன்றென வொன்றி யைவாய்
விடம்பா யரவம் விழுங்கும்மிரை யொத்து நெஞ்சந்
திடம்பாடு கொள்ள வினைவாங்கிச் செழியன் கல்வி
இடம்பாடு நல்கும் பயன்போன்மகிழ் வெய்த நின்றார். |
(இ
- ள்.) உடம்பு ஆறிரண்டிற்கு உயிர் ஒன்று என ஒன்றி -
இவ்வுடல் பன்னிரண்டிற்கும் உயிர் ஒன்றே என்று அனைவருங் கருதுமாறு
அப்பன்னிருவரும் ஒன்றுபட்டு, விடம்பாய் ஐவாய் அரவம் - நஞ்சு பரந்த
ஐந்து வாய்களையுடைய பாம்பானது, விழுங்கும் இரை ஒத்து - விழுங்கும்
உணவினைப் போன்று, நெஞ்சம் திடம்பாடு கொள்ள - நெஞ்சம் உறுதியைப்
பொருந்த, வினை வாங்கி - வினையினை ஏற்றுக் கொண்டு, செழியன் கல்வி
இடம்பாடு நல்கும் பயன் போல் - பாண்டியனது கல்விப் பொருளும் செல்வப்
பொருளும் (அவனுக்குப்) பயன் அளித்தல் போலப் (பயனை நல்கி), மகிழ்வு
எய்த நின்றார் - (அதனால்) அவன் மகிழ்ச்சியடையத் தமக்குரிய
அமைச்சியயனெறியில் தவறாது ஒழுகினர்.
அரவின்
ஐந்து வாயுள் ஒருவாய் இரை விழுங்குதற்கு ஏனை வாய்கள்
அமைந்திருத்தல் போன்று ஒருவர் பெறும் சிறப்பு முதலியவற்றுக்கு ஏனையர்
அமைந்திருத்தலாகிய திண்ணிய நெஞ்சு உடையராய் என்பார், 'ஐவா யரவம்
விழுங்கும் இரை யொத்து நெஞ்சம் திடம்பாடு கொள்ள' என்றார். வினை
வாங்கி - கருமத்தை ஏற்று நடாத்தி. இடம்பாடு - செல்வம். இச்செய்யுளுக்குப்
பிறர் கூறிய உரை சிறிதும் பொருந்தாமை ஓர்க. (13)
நல்லாவின் பாலி னறுந்தேன்கலந் தென்னப் பன்னூல்
வல்லாரு மாகி மதிநுட்பரு மாகிச் சோர்வில்
சொல்லா லடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப்
பல்லார் பிறர்சொற் பயனாய்ந்து கவர வல்லார். |
(இ
- ள்.) நல் ஆவின் பாலில் நறுந்தேன் கலந்தென்ன - நல்ல
ஆனின் பாலில் நறுந்தேன் கலந்தாற்போல, பல்நூல் வல்லாருமாகி
மதிநுட்பருமாகி - பல நூல்களும் கற்று வல்ல செயற்கையறிவுடையராய்
அதனோடு இயற்கையாகிய நுண்ணறிவும் கலத்தலுடையராய், சோர்வு இல்
சொல்லால் - சோர்வில்லாத சொற்களால், அடையார் மனமும் களிதூங்கச்
சொல்லி - பகைவர் மனமுங் களிப்படையுமாறு பேசி, பிறர் பல்லார் சொல்
பயன் ஆய்ந்து கவர வல்லார் - பிறர் பலருங் கூறுஞ் சொற்களிலுள்ள குற்ற
நோக்காது அவற்றின் பயனை மட்டும் ஆராய்ந்து கொள்ளுதலில் வல்லார்.
இச்செய்யுளானது,
"மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை"
|