|
சிவ புண்ணியத்தின்
பயனானவனே வணக்கம், அங்கயற் கண்ணி நாத -
அங்கயற் கண்ணம்மையின் நாதனே, நின் கருணை போற்றி - நினது
திருவருளுக்கு வணக்கம்.
போற்றி
என்பதற்குக் காக்க என்றுரைத்தலுமாம். என் புண்ணிப்
பயன் - யான் முற்பிறப்புகளிற் செய்த சிவபுண்ணியத்தின் பயனாக
வெளிப்பட்டருளியவன் என்றபடி, ஆல் : அசை. (14)
தெளித லின்றியே செய்த தீமையால்
விளியு மென்னையு மாளல் வேண்டுமோ
எளிய ரெங்குளா ரென்று தேர்ந்துதேர்ந்
தளியை யாவதுன் னருளின் வண்ணமே. |
(இ
- ள்.) செய்த தீமையால் - யான் புரிந்த தீவினையால், தெளிதல்
இன்றியே விளியும் என்னையும் - நின் கருணைத் திறத்தை அறியாது மாளா
நிற்கும் நாயேனையும், ஆளல் வேண்டுமோ - ஆளுதல் வேண்டுமோ,
எளியர் எங்குளார் என்று தேர்ந்து தேர்ந்து அளியை ஆவது - களை
எளியார் எங்குளார் என்று தேடித் தேடி அவர் மீது அருளுடையையா
கணற்றயிருத்தல் உன் அருளின் வண்ணமே - நின் திருவருளின் தன்மை
போலும்.
இச்
செய்யுள்,
"பித்த
னென்றெனை யுலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் றிருவருட் கூடிடு முபாயம தறியாமே
செத்துப் போயரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
அத்த னாண்டுதன் னடியரிற் கூட்டிய வதிசயங் கண்டாமே" |
என்னும் திருவாசகக்
கருத்தைத் தழுவியிருத்தல் காண்க. (15)
உம்மை நல்லற முடைய நீர்மையால்
இம்மை யிம்மனு வியம்பி னாயிது
அம்மை நன்னெறிக் கேது வாதலான்
மும்மை யுந்நல முடைய மொய்ம்பினேன். |
(இ
- ள்.) உம்மை நல் அறம் உடைய நீர்மையால் - முற்பிறப்பிற்
செய்த நல்ல அறத்தினையுடைய தன்மையால், இம்மை இம்மனு
இயம்பினாய் - இப்பிறப்பில் இம் மந்திரத்தை உபதேசித் தருளினை; இது
அம்மை நல்நெறிக்கு ஏது ஆதலால் - இது மறுமையிற் சிவகதியிற்
செல்லுதற்குக் காரணமாதலால், மும்மையும் - மூன்று பிறப்பிலும், நலம்
அடைந்த மொய்ம்பினேன் - பயன் பெற்ற வலியனாயினேன்.
இப்பிறப்பில்
இம்மந்திரம் உபதேசிக்கப் பெற்றமையால் முல்
பிறப்பில் இதற்கேதுவாகிய சிவ புண்ணியமும், வரும் பிறப்பிற்
இதனாலெய்தும் சிவகதிப்பேறும் உடையேனாகலின் அடியேன்
மும்மையும் பெரு நலமுடையனாயினேன் என்றது;
|