II


நாரைக்கு முத்திகொடுத்த படலம்499



     செறித்தாலன்ன என்பது செறித்தன்ன என்றாயிற்று. இகத்தல் -
கடத்தல். புரை - குற்றம். ஆல் : அசை. (5)

முத்த ரான முனிவர் குழாத் தொடுஞ்
சுத்த வானந்த வாரியுட் டோய்ந்துதன்
சித்த மாசு கழீஇச்சிவ மாகிய
சத்தி யத்தவ மாமுனி தங்குமால்.

     (இ - ள்.) முத்தரான முனிவர் குழாத்தொடும் - சீவன் முத்தர்களான
முனிவர் கூட்டத்துடன், சுத்த ஆனந்த வாரியுள் தோய்ந்து - சிவானந்தக்
கடலில் மூழ்கி, தன் சித்தமாசு கழீஇ - தனது மன அழுக்கைப் போக்கி,
சிவமாகிய சத்தியத் தவமா முனி தங்கும் - சிவமாந் தன்மை பெற்ற சத்தியன்
என்னும் பெயரையுடைய பெரிய தவமுனிவன் தங்கியுள்ளான்.

     முத்தர் - சீவன் முத்தி பெற்றவர். கழீஇ : சொல்லிசை யளபெடை.
சிவமாதல் - சிவத்துவ விளக்கம் பெறுதல், இதிலும் பின்வரும் மூன்று
செய்யுட்களிலும் ஆல் : அசை. (6)

கூப்பி டெல்லை குணித்துச் சதுரமா
யாப்ப மைந்துசுற் றெங்கும் படித்துறைக்
கோப்ப மைந்து குளிர்சந்தி யாமடங்
காப்ப மைந்தோர் கயந்தலை யுள்ளதால்.

     (இ - ள்.) கூப்பிடு எல்லை குணித்துச் சதுரமா யாப்பு அமைந்து -
ஒரு கூப்பிடு தூரம் வரையறுத்துச் சதுரமாகக் கட்டப்பட்டு, சுற்று எங்கும்
படித்துறைக்கோப்பு அமைந்து - சுற்று முழுதும் படித்துறைக் கோவை
அமையப் பெற்று, காப்பு - காவலோடு கூடிய, குளிர் சந்தியா மடம்
அமைந்து - தண்ணிய சந்தியா மடம் அமையப்பட்டு, ஓர் கயந்தலை
உள்ளது - ஒரு தடாகம் உள்ளது.

     குணித்து - வரையறுத்து, சந்தியாமடம் - சந்திக் கடன் செய்தற்குரிய
மடம். (7)

விரைசெய் சண்பகம் பாதிரி வேங்கைதேன்
இரைசெய் வஞ்சி யிலஞ்சி குராமரா
நிரைசெய் கிஞ்சுக நீண்மரு தாதியா
உரைசெய் பன்மர மும்புறத் துள்ளவால்.

     (இ - ள்.) விரை செய் சண்பகம் பாதிரி வேங்கை - மணம் வீசுஞ்
சண்பகமும் பாதிரியும் வேங்கையும், தேன் இரை செய்வஞ்சி இலஞ்சி
குராமரா - வண்டுகள் ஒலித்தலைச் செய்யும் வஞ்சியும் மகிழும் குராவும்
மராவும், உரைசெய் கிஞ்சுகம் நீள் மருது ஆதியா - வரிசையாகவுள்ள