|
நெற்றியில் இட்ட
சிந்துரமானது, கார் மாலை இருள் முகத்து ஒதுங்கிச்
செல்லும் இரவி செங்கிரணம் போன்றது - கரிய மாலைக்காலத்திலுள்ள
இருள் முகத்தில் ஒருபுறஞ் சாய்ந்து செல்லும் சூரியனது சிவந்த கிரணத்தை
ஒத்தது; இருளினை மறைத்த கண்டன் எய்தவாய் பெய்யும் செந்நீர் -
இருளை மறைத்த திருமிடற்றினையுடைய இறைவன் எய்தவாய் பொழியும்
குருதியானது, இரள் முழுது உண்ண காலை எழு கதிர் வட்டம் அன்னது -
இருள் முழுதையும் உண்ணுதற்குக் காலையில் எழுந்த வட்டமாகிய
இளஞாயிற்றை ஒத்தது.
கிடந்தாலனையது
என்பது கிடந்தனையது என்றாயிற்று. வேட்டுக்
கோலம் பூண்டு வந்தமையால் இருளினை மறைத்த கண்டன் என்றார்.
வாய் - வழி. (33)
பொய்யறா மனத்தார் தேற்றும் புன்னெறி யொழுக்கம் பூண்ட
வெய்யகோன் கொடுங்கா றன்னை வெண்மருப் பாகத் தாங்கி
மையன்மா வடிவங் கொண்டு வந்தவெங் கலியைத் தென்னன்
செய்யகோ லையன் சிங்க வாளியாய்ச் சிதைத்த தன்றே.
|
(இ
- ள்.) பொய் அறா மனத்தார் தேற்றும் புல்நெறி ஒழுக்கம்
பூண்ட- பொய் நீங்காத உள்ளத்தினையுடைய சமணர்கள் (அறநெறியெனத்)
தெளிவிக்கும் மறநெறியில் ஒழுகுதலை மேற்கொண்ட, வெய்யகோன்
கொடுங்கோல் தன்னை - கொடியனாகிய சோழனது கொடுங் கோலை,
வெண் மருப்பாகத் தாங்கி - வெள்ளிய கொம்பாக ஏந்தி, மையல் மா
வடிவம் கொண்டுவந்த வெங்கலியை - மத மயக்கத்தை யுடைய யானையின்
வடிவத்தைக் கொண்டுவந்த கொடிய கலியை, தென்னன் செய்யகோல் -
பாண்டியனது செங்கோலானது, ஐயன் சிங்க வாளியாய்ச் சிதைத்தது.
இறைவன் விடுத்தருளிய நாரசிங்கக் கணையாகி அழித்தது.
புன்னெறி
- புன்மையாகிய சமணநெறி. சோழனுடைய கொடுங்
கோலையம் தீச் செயலையும் பாண்டியனது செங்கோல் வென்றது என்க.
சிவபெருமான் வேடுருத் தாங்கிவந்த அம்ப விடுத்து யானையைக்
கொன்றதற்குப் பாண்டியனது செங்கோல் காரணமாகலின் செய்யகோல்
சிதைத்தது என அதன்மே லேற்றிக் கூறினார். அன்று, ஏ : அசைகள். (34)
உருமுவீழ்ப் புண்ட குன்றி னும்பன்மா* வம்பு தொட்ட
பெருமுழை வாயும் வாயும் பெருகின வருவிச் சோரி
கருமுகின் மானச் சேனங் கழுதுகள் பூத மொய்த்த
திருமணித் தடந்தோள் வீங்கத் தென்னவ னுவகைபுத்தான். |
(இ
- ள்.) உருமு வீழ்ப்புண்ட குன்றின் உம்பல்மா - இடிவீழப் பட்ட
மலையை ஒத்த யானையின், அம்பு தொட்ட பெருமுறை வாயும் வாயும்
அருவிச் சோரி பெருகின - அம்பினாலே தொளைக்கப்பட்ட பெரிய முழை
போன்ற இடத்தினின்றும் வாயினின்றும் அருவி போரும் குருதிகள்
பெருகின; கருமுகில் மான - (அம்மலையிற் றவழும்) கரிய முகிலை ஒக்க,
சேனம்
|