|
எச்சமாக்கி யுரைத்தலுமாம்.
தூளாக வென்பது ஈறு தொக்கது. பீலியோடும்
தகர்த்தனர் என்றும், வாய்க்காலில் விடுத்தனர் என்றும் கூறுவாருமுளர்.
(37)
எறியுண்டு
செய்த மாய மிழப்புண்டு சேனை யோடு
முறியுண்டு நடுக்கம் பாவ மூழ்குண்டு மாழ்கிச் சாம்பிப்
பறியுண்ட தலையர் யாரும் பழிப்புண்டு பாயுந் தாமும்
உறியுண்ட கரகத் தோடு மொதுங்குண்டு பதுங்கிப் போனார். |
(இ
- ள்.) பறியுண்ட தலையர் யாரும் - மயிர் பறிக்கப்பட்ட
தலையினையுடைய சமணரனைவரும், எறியுண்டு - அடிபட்டு, செய்த மாயம்
இழப்புண்டு - செய்த மாயத்தை இழந்து, சேனையோடும் முறியுண்டு -
படைகளோடும் முறிபட்டு, நடுக்கம் பாவம் மூழ்குண்டு மாழ்கி சாம்பி -
நடுக்கத்திலும் பாவத்திலும் மூழ்கி மயங்கி வாடி, பழிப்புண்டு -
பழிப்படைந்து, பாயும் தாமும் உறியுண்ட கரகத்தோடும் ஒதுங்கினர் பதுங்கிப்
போனார் - பாயும் தாமும் உறியிற் பொருந்திய கமண்டலத்தோடும் ஒளித்துப்
பதுங்கி ஓடினர்.
முறிதல்
- நிலை கெடுதல். உறியுண்ட - உறியுட் கொண்ட பாயும்
தாமும் கரகத்தோடும் போனார் என்றது,
| "தானுந் தேரும்
பாகனும் வந்தென் னலனுண்டான்" |
என்புழிப்போலத்
திணைவிரவிச் சிறப்பால் உயர்திணை முடிபேற்றது;
திணைவழுவமைதி. (38)
மாதங்கந்
தடிந்தட் டாலை மண்டபத் திருந்த விரன்
பாதங்கள் கையாற் பற்றிப் பாண்டிய னிரந்து வேண்டிப்
போதங்கள் கடந்தா யென்றும் பொலியவிங் கிருத்தி யென்ன
வேதங்கட் கருத்தஞ சொன்ன வேதிய னதற்கு நேர்ந்தான். |
(இ
- ள்.) மாதங்கம் தடிந்துஅட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் - யானையைக் கொன்று அட்டாலை மண்டபத்தின்கண் நிகரின்றி
இருந்த வீரனாகிய இறைவன் திருவடிகளை, பாண்டியன் கையால்பற்றி
இரந்து வேண்டி - விக்கிரம பாண்டியன் தன்கைகளாற் பிடித்துக்கொண்டு
குறையிரந்து வேண்டி, போதங்கள் கடந்தாய் - பசுஞானம் பாசஞானங்களைக்
கடந்தவனே, பொலிய என்றும் இங்கு இருத்தி என்ன - விளக்கமுற
எஞ்ஞான்றும் இங்கு வீற்றிருப்பாயாக! என்று விண்ணப்பிக்க, வேதங்கட்ழு
அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான் - வேதங்களுக்குப்
பொருளருளிச் செய்த அந்தணன் அதற்கு இசைந்தருளினான்.
இரந்து
வேண்டி இருத்தியென்ன வென்க. போதங்கள் - பாச பசு
ஞானங்கள்;
| "பாச ஞானத்தாலும்
பசுஞானத் தாலும்பார்ப்பரிய பரம்பரனை" |
|