II


6திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     ஒலிபோல் ஒளியுண்டாக ஆர்த்து என்க. உருவம் என்பது உகரம்
பெற்று உருமு என்றாயது; இதற்று விதி,

"ஈமும் கம்மும் உருமென் கிளவியும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன"

என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். பணம் - படம்; அடவி - காடு;
மிகுதியைக் குறித்தது. பணாடவி : நெடிற்சந்தி. நெளிய என்பது பிறவினைப்
பொருட்டாயது; உடல் நெளிய என்பதனை ஒரு சொல்லாக் கொண்டு,
அராநெளிய என்னலுமாம். யானை - திக்கயங்கள்; ‘தசை முகவேழம்’
என்றார் இளங்கோவடிகளும். (7)

வெள்ளிய நீறு பூத்து முழவென வீங்கு காய்போற்
றெள்ளிய வாலி சிந்தத் திரண்டதிண் பளிக்குத் தூண்போல்
ஒள்ளிய தாரைசோர வும்பர்மீன் கணங்க ளோடுந்
துள்ளிய திரையி லாடு மீன்கணந் துடித்து வீழ.

     (இ - ள்.) வெள்ளிய நீறு புத்து முழவு என வீங்கு காய்போல் -
வெண்மையான நீறு பூக்கப்பெற்று மத்தளம் போலப் பருத்த பூசனிக்
காயைஙப போல, தெள்ளிய ஆலி சிந்த - தெளிந்த மழைத் துளிகள்
சிந்தவும், திரண்ட திண் பளிக்குத்தூண்போல் - திரட்சியாகிய வலிய
பளிங்குத் தூணைப் போல, ஒள்ளிய தாமரை சோர - ஒளி பொருந்திய
தாரைகள் பொழியவும், உமபர் மீன் கணங்களோடும் - மேலிடத்துள்ள
உடுக்களாகிய மீன் கூட்டங்களோடு, துள்ளிய திரையில் ஆடும் மீன்கணம்
துடித்து வீழ - மேலெழுந்து வீசிய அலையின்கண் விளையாடும் மீன்
கூட்டங்களும் துடித்து வீழவும்.

     ‘வெள்ளிய நீறுபூத்து முழவென வீங்கு’ என்னும் அடையால்
பூசனிக்காய் என்பதாயிற்று. ஆலி - ஆலங்கட்டியுமாம்.

"வெள்ளிவெண், கோல்நிரைத்தன போற்கொழுந் தாரைகள்" "வானம், நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட"

என்னும் சிந்தாமணித் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன. பருமனைக்
குறிக்கத் ‘தூண்போல்’ என்றார். உம்பர் - மேலிடம்; விசும்பிற்காயிற்று. (8)

ஆர்த்தெழு கொண்மூ வேழுஞ் சராசா மனைத்துஞ் சூழ்ந்து
போர்த்தன ஞால முண்ணப் புக்கதோர் வடிவங் கொண்ட
தீர்த்தனில் விசும்பும் பாருந் திசைகளுந் தெரியா வாகப்
பார்த்தகண் ணுழையா வாகப் பரந்திருள் கான்ற வன்றே.

     (இ - ள்.) ஆர்த்து எழு கொண்மூ ஏழும் - ஆரவாரித்து எழுந்த
ஏழு மேகங்களும், சர அசரம் அனைத்தும் சூழ்ந்து போர்த்தன. இயங்கியற்
பொருளும் நிலையியற் பொருளுமாகிய அனைத்தையும் வளைந்து மூடினவாய்,
ஞாலம் உண்ணப் புக்கது ஓர் வடிவம் கொண்ட தீர்த்தளில் - உலகத்தை
அழிக்கப் புகுந்ததாகிய ஒப்பற்ற வடிவத்தினைக் கொண்ட