நிந்தனைசெய்
தொழுகுவா ரவளையொரு நாணீத்து
நீங்கி
வேற்றூர்த்
தந்தமர்மங் கலங்காண்பான்* றனியேவைத் தகம்பூட்டித்
தாங்கள்போனார்.
|
(இ
- ள்.) வந்த மணவாட்டி சிவவிந்தனையும் சைவ தவவடிவும்
நோக்கி - (தமது இல்லிற்கு) வந்த மணக்கோலத்தையுடைய கௌரியின்
சிவ சிந்தனையையும் சைவ தவவேடப் பொலிவையும் நோக்கி, வெந்த
உடல்போல் மனமும் வெந்து - (தமது) கருகிய உடலைப் போல மனமும்
வெந்து, அவனைவேறு ஒதுக்கி வேண்டா ராகி நிந்தனை செய்து
ஒழுகுவார் - அவளை வேறாக ஒதுக்கி வைத்துச் சிறிதும் விரும் பாராய்
நிந்தித்து ஒழுகுபவர்கள், தாங்கள் ஒருநாள் வேற்றூர் தம் தமர் மங்கலம்
காண்பான் - தாம் ஒருநாள் வேற்றூரில் நடக்கும் தம் சுற்றத்தாரின்
மணத்தைக் காணுதற்கு, அவளைத் தனியே வைத்து நீத்து நீங்கி அகம்
பூட்டிப் போனார் - அவளைத் தனியாக வைத்து விட்டு நீங்கி இல்லினைப்
பூட்டிக்கொண்டு போயினர்.
மணவாட்டி
- மணமகள்; மணவாளனுக்குப் பெண்பால். தவ வடிவு
- திருநீறு சாதனமுடைய வடிவு. சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்
பட்டமையால் வெந்த உடம்பு. உளம் அழுக்காற்றாற் புழுங்குதலை
வெந்து என்றார். (15)
உண்மாசு கழுவுவது நீறென்றே யுபநிடத
முரைப்பக் கேட்டும்
மண்மாசு படப்பூசும் வடிவுடையா ரகன்றதற்பின்
மனையில் வைகும்
பெண்மாசு கழியவொரு சிவனடியார் தமைக்காணப்
பெறாம லின்றென்
கண்மாசு படுவதெனக் கனிந்தொழுகு தலையன்பாற்
கவலை கூர்வாள். |
(இ
- ள்.) நீறே உள்மாசு கழுவுவது என்று உபநிடதம் உரைப்பக்
கேட்டும் - திருநீறே அகத்திலுள்ள அழுக்கைப் போக்கித் தூய்மை
செய்வது என்று உபநிடதங் கூறுவதைக் கேட்டும், மண்மாசு படப் பூசும்
வடிவு உடையார் அகன்றதன் பின் - மண்ணை அழுக்குண்டாகப் பூசுகின்ற
வடிவினையுடைய அவர்கள் போனபின், மனையில் வைகும் பெண் -
இல்லில் இருக்கும் கௌரி, மாசு கழிய - குற்றம் ஒழியுமாறு, ஒரு சிவன்
அடியார் தம்மைக் காணப் பெறாமல் - ஒரு சிவனடி யாரைக்
காணப்பெறாமல், இன்று என் மாசு படுவதுஎன - இப்பொழுது என் கண்
மாசடைகின்றது என்று, கனிந்து ஒழுகு தலையன்பால் கவலை கூர்வாள் -
பழுத்து ஒழுகுத் தலையன்பினாற் கவலை யுறுவாளாயினாள்.
(பா
- ம்.) * காண்பார்.
|