II


விருத்தகுமார பாலரான படலம்71



எனைத்துயிர்க்கு முறுதியிக பரமென்ப வவைகொடுப்பா
                             னெல்லாந் தானாய்
அனைத்துயிர்க்கு முயிராகு மரனென்ப வவனறிவார்க்
                              கங்கம் வாக்கு
மனத்துறுமெய்ப் பத்திவழி வருமென்ப வப்பத்தி
                              வழிநிற் பார்க்கு
வினைத்துயர்தீர்த் திடவெடுத்த வடிவென்ப தவனடியார்
                                 வேட மன்றோ.

     (இ - ள்.) எனைத்து உயிர்க்கம் உறுதி இகபரம் என்ப - எல்லா
உயிர்களுக்கும் உறுதியாவன இம்மை யின்பமும் மறுமை யின்பமும் என்று
கூறுவர்; அவை கொடுப்பான் எல்லாம் தானாய் அனைத்து உயிர்க்கும் உயிர்
ஆகும் அரன் என்ப - அவற்றை அருளுபவன் எல்லாமும் தானாகி
எவ்வுயிர்க்கும் உயிராயுள்ள சிவபெருமான் என்பர்; அவன் அறிவார்க்கு
அங்கம் வாக்கு மனத்து உறு மெய்ப் பத்திவழி வரும் என்ப - அவனை
உணர்வார்க்கு உடலும் உரையும் உள்ளமுமாகிய இம்மூன்று கரணங்களாலும்
செய்யப்படுகின்ற உண்மையாகிய பத்திநெறி உண்டாம் என்பர், அப்பத்திவழி
நிற்பார்க்கு - அவ்வன்பு வினைகளால் வருந் துன்பங்களைப் போக்குதற்கு
எடுத்த வடிவமென்று சொல்லப்படுவது, அவன் அடியார் வேடம் அன்றோ -
அச்சிவபிரான் அடியார்களின் திருவேடம் அல்லவா?

     வீட்டினையும் அடக்கி ‘இகபரம்’ என்றார். என்ப என்பனவற்றை
அசையென்னலுமாம். அவனறிவார்க்கு, இரண்டனுருபு தொக்கு நின்றது.
அறிதலாவது எப்பொழுதும் சிந்தித்தல், இறைவன் எடுத்த
வடிவெனப்படுவது என்க;

"அறிவரியான் றனையறிய வாக்கை யாக்கி
     அங்கங்கே யுயிர்க்குயிரா யறிவுகொடுத் தருளாற்
செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவே யாகும்"

என்றும்,

"தாபர சங்கமங்க ளென்றிரண் டுருவினின்று
மாபரன் பூசைகொண்டு மன்னுயிர்க் கருளைவைப்பன்"

என்றும் சிவஞானசித்தியார் கூறுவது காண்க. (18)

என்னவிருந் தலமருவா ளிருக்குமிடத் தவளுள்ளத்
                         தெண்ணி யாங்கே
தென்னவனா யிருந்தரசு செய்தபிரா னவட்கருளுஞ்
                         செவ்வி நோக்கிக்