|
(இ
- ள்.) தையலாள் - கௌரியம்மையின், செய்ய வாய் இடை
இடையே முகமன் உரை இன் அமுது செவியில் ஊட்ட - சிவந்த வாயானது
அடிக்கடி இன்மொழிகளாகிய இனிய அமுதினைச் செவியில் உண்பிக்கவும்,
வளைக்கை - வளையலணிந்த கையானது, அறுசுவை அமுது வாய் ஊட்ட -
அறுசுவையோடுங் கூடிய அமுதினை வாயில் உண்பிக்கவும், தளர்ந்த
யாக்கை ஐயர் - (மூப்பினால்) தளர்ச்சியுற்ற திருமேனியையுடைய
அவ்வேதியர், திருவமுது செய்து - உண்டருளி, அமுது உண்டவர் என -
தேவாமுதம் உண்டவர் போல, மூப்பு அகன்று - முதுமை யொழிந்து, பூவில்
கைய தே மலர் வாளிக்காளை வடிவாய் - மலர்வில்லை ஏந்திய
கையினையுடைய தேன் சிந்து்ம மலர்க் கணைகளையுடைய மதவேளின்
வடிவினை உடையராகி, கன்னி காண இருந்தார் - கௌரி பார்க்குமாறு
இருந்தனர்.
இடையிடையே
அமுதம் போலும் இன்மொழிகளைக் கூறிக் கையால்
அமுதூட்டினாவ என்க. கையினையுடைய காளை, வாளியை யுடைய காளை
எனக் கூட்டுக. மன்மதனுக்கு மலர் வில்லும் உண் டென்பதனை
புஷ்பதந்வா என அவனுக்கு வழங்கும் பெயரானறிக;
| "பூங், குலை சிலையாக்
கொண்டவர் போலும்" |
என மதுரைக்கலம்பகங்
கூறுதலுங் காண்க. (25)
பூசியவெண்
ணீறுபோய்க் கலவையாய்க் கண்டிகைபோய்ப்
பொன்செய்
பூணுங்
காசணிபொற் குண்டலமுங் கடகமுமாய் மூப்புப்போய்க்
காளை
யான
தேசுருவங் கண்டுநடு நடுங்கிவளைக் கரநெரித்துத்
திகைத்து
வேர்த்துக்
கூசியொரு புறததொதுங்கி நின்றாளக் கற்புமலர்க்
கொம்ப
ரன்னாள். |
(இ
- ள்.) பூசிய வெள்நீறு போய்க் கலவையாய் - அணிந்த
வெள்ளிய திரு நீறு மாறிக் கலவைச் சாந்தாகி, கண்டிகை போய் - உருத்தி
ராக்கங்கள் மாறி, பொன் செய்பூணும் காசு அணி பொன் குண்டலமும்
கடகமும் ஆய் - பொன்னாற் செய்த அணிகளும் மணிகளழுத்திய
பொன்னாலாகிய குண்டலங்களும் கடகங்களும் ஆகி, மூப்புப் போய் காளை
ஆன தேசு உருவம் - முதுமை மாறிக் கட்டிளமை ஆகிய ஒளி பொருந்திய
உருவத்தை, அக்கற்பு மலர்க் கொம்பர் அன்னாள் கண்டு - கற்பினையுடைய
பூங்கொம்பு போன்ற அக் கௌரியம்மை பார்த்து, நடுநடுங்கி வளைக்கரம்
நெரித்து - நடுநடுங்கி வளையலணிந்த கைகளை நெரித்து, திகைத்து வேர்த்து
- மனந்திகைத்து உடல் வெயர்த்து, கூசி ஒருபுறத்து ஒதுங்கி நின்றாள் -
அஞ்சி ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றாள்.
போய்
- மாறி, ஆய் என்னும் எச்சங்கள் ஆன என்னும் பெயரெச்ச
வினை கொண்டன. மகளிர் அச்சத்தால் கை நெரித்தல் இயல்பு. கொம்பர் :
போலி. (26)
|