II


84திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



சிலம்பி வாயினூ லிழைத்திடு பந்தரிற்
     செங்கண்மா றொழவைகும்
அலம்பு தெண்டிரைப் பொன்னியந் தண்டுறை
     யானைக்கா விறைக்கன்பு
கலந்த சிந்தையான் மூவிரு பத்துநாற்
     கலைகளும் பயின்றுள்ளம்
மலர்ந்த வன்கரி காற்பெரு வளத்தவன்
     வையகம் புரக்கின்றான்.

     (இ - ள்) சிலம்பி வாயின் நூல் இழைத்திடு பந்தரில் - சிலந்திப்
பூச்சியானது வாயின் நூலாற் செய்த பந்தரின்கண், செங்கண்மால்
தொழவைகும் - சிவந்த கண்களையுடைய திருமால் வணங்க வீற்றிருக்கும்,
அலம்பு தெண் திரைப் பொன்னி அம்தண்துறை ஆனைக்கா இறைக்கு -
ஒலிக்கின்ற தெள்ளிய அலைகளையுடைய காவிரியாற்றின் அழகிய தண்ணிய
நீர்த்துறையையுடைய திருவானைக்காவுடைய செல்வருக்கு, அன்புகலந்த
சிந்தையான் - அன்பு கலந்த உள்ளமுடையவனும், மூவிருபத்து
நால்கலைகளும் பயின்று உள்ளம் மலர்ந்தவன் - அறுபத்து நான்கு
கலைகளையும் கற்று அறிவு விரிந்தவனும் ஆகி, கரிகால் பெரு வளத்தவன்
- கரிகாற்பெருவளத்தா னென்னும் சோழமன்னன், வையகம் புரக்கின்றான் -
நிலவுலகை ஆண்டு வருவானாயினான்.

     ஆனைக்கா - யானை பூசித்த காவாகிய பதி. யானை பூசித்ததும்,
சிலம்பி வாயினூலாற் பந்தரிட்டு வழிபட்டதுமாகிய வரலாறுகளைப்
பெரியபுராணத்திலுள்ள கோச்செங்கட் சோழர் புராணத்தாலறிக. கரிகாற்
பெருவளத்தான் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; போர்
குறித்து வடதிசைச் சென்று, அமயமலை குறுக்கிட்ட தென்று சினந்து
அதனைச் செண்டாடித்த பெருவீரன்; காடுகெடுத்து நாடாக்கியும்,
காவிரிக்குக் கரையிடுவித்தும், நீர் நிலைகளைப் பெருக்கியும் நாட்டினை
வளஞ்செய்வித்தவன்; பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை முதலிய
பாட்டுகட்குத் தலைவன்; பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார்
என்ற புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் கொடுத்தவன்;
மற்றும் இவன் பெருமைகளைப் பட்டினப்பாலை முதலியவற்றா னறிக. (4)

பொன்னி நாடவன் வாயிலுள் ளானொரு
     புலவன்வந் தலர்வேம்பின்
கன்னி நாடனைக் கண்டுமுன் பரவுவான்
     கனைகழற் கரிகாலெம்
மன்ன வற்கறு பத்துநாற் கலைகளும்
     வரும்வரா துனக்கொன்று
தென்ன ரேறனை யாயது பரதநூ றெரிந்திலை
     யெனச் சொன்னான்.