செல்வ நான்மாடக்கூடல்
நரைவிடை உடையநாதன் - செல்வமிக்க
நான்மாடக்கூடலின்கண் எழுந்தருளிய வெள்ளிய இடபவூர்தியையுடைய
சோமசுந்தரக் கடவுள், நந்தியை வெகுண்டு நோக்கா - திருநந்திதேவரைச்
சினந்து பார்த்து.
போதநூல்
- சிவஞானபோதம். ஒல்லென, விரைவுக் குறிப்பு. நரை -
வெண்மை. (8)
அடுத்துநா மிருக்குஞ் செவ்வி யறிந்திடா திவரை வாயில்
விடுத்துநீ யிருந்தாய் தீங்கு விளைந்ததுன் றனக்கு மிந்தத்
தொடுத்ததீங் கொழிய வின்றோர் சுறவுரு வாகி வையம்
உடுத்தகா ரோத நீர்புக் குழல்கெனப் பணித்தான் மன்னோ. |
(இ
- ள்.) நாம் அடுத்து இருக்கும் செவ்வி அறிந்திடாது - நாம்
பொருந்தி யிருக்கும் அமயத்தை அறியாமல், இவரை வாயில் விடுத்து நீ
இருந்தாய் - இவர்களை வாயிலிற் புகவிட்டு நீ வாளா இருந்தனை; தீங்கு
விளைந்தது - அதனால் தீங்கு விளைந்தது; உன்தனக்கும் தொடுத்த இந்தத்
தீங்கு ஒழிய - உனக்கும் நேர்ந்த இக்குற்றம் நீங்குமாறு, இன்று ஓர் சுறவு
உருவாகி - இப்பொழுதே ஓர் சுறாமீன் வடிவமாகி, வையம் உடுத்த கார்
ஓத நீர் புக்கு உழல்க எனப் பணித்தனன் - நிலவுலகைச் சூழ்ந்த கரிய
ஒலிபொருந்திய நீரினையுடைய கடலின்கட்புகுந்து வருந்துவாயாக என்று
கட்டளையிட்டான்.
அடுத்து
அறிந்திடாது எனக் கூட்டலுமாம். உன்றனுக்கும், உம்மை
எச்சப் பொருட்டு. உழல்கென, அகரம் தொக்கது. மன், ஓ அசைகள். (9)
வெருவரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப்*
பெருவலி தன்னைச் சாரும் பெற்றியாற் சாபங் கூறான்
அருவரை நெஞ்சு போழ்ந்த வள்ளிலை நெடுவேற் செங்கை
முருகனை வணிகர் தம்மின் மூங்கையா கென்றா னிப்பால். |
(இ
- ள்.) வெருவரு செலவின் வேழ முகத்தனை - கண்டோர்க்கு
அச்சம் வருதற்கேதுவாகிய நடையினையுடைய யானையின் முகத்தையுடைய
மூத்த பிள்ளையார்க்கு, விதித்த சாபப் பெருவலி - இடும் சாபத்தின் பெரிய
வலியானது, தன்னைச்சாரும் பெற்றியால் - தன்னையே வந்தடையுந்
தன்மையினாலே, சாபம் கூறான் -சாபங் கூறாமல், அருவரை நெஞ்சு
போழ்ந்த - வெல்லுதற்கரிய கிரவுஞ்ச மலையின் மார்பினைப் பிளந்த, அள்
இலை நெடுவேல் செங்கை முருகனை - கூரியதகட்டு வடிவாய் நீண்ட
வேற்படை ஏந்திய சிவந்த திருக்கரத்தை யுடைய இளைய பிள்ளையாரை,
வணிகர்தம்மில் மூங்கை ஆக என்றான் - வணிகர் மரபில் ஊமனாகத்
தோன்றக் கடவை என்று சபித்தனன்; இப்பால் - பின்.
(பா
- ம்.) * சாபம் பெருவலி.
|