கருவி - படைக்கலமும்
தானையும். படைக்கலப் பயிற்சிக்குரிய நூல்களும்.
யானை குதிரை ஊர்தற்குரிய நூல்களும், பிறவு மென்க. தொன்னூல் -
நீதிநூல். அமைச்சர் கண்ணாக அரசபாரம் நடத்தலின் 'காவலற்குக்
கண்போன்ற அமைச்சர்" என்றார்;
"சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொள்ளல்" |
என்னும் திருக்குறள்
நோக்குக. (7)
புல்லாதார்
முரணடக்கிப் பொருள்கவர்வா ரென்பதெவன்
சொல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை
வல்லாருந் தத்தமதேத் தரியபொருள் வரவிடுத்து
நல்லாரா யொப்புரவு நட்படைய நடக்கின்றார். |
(இ
- ள்.) சொல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை வல்லாரும்
- அடைதற்கரிய பலவேறு வகைப்பட்ட தீவுகளில் கோல் கோணாது
குடிகளைப் புரக்கவல்ல மன்னரும், தத்தம தேத்து அரிய பொருள்
வரவிடுத்து - தங்கள் தங்கள் நாட்டிலுள்ள அரியபொருளை அனுப்பி,
நல்லாராய் ஒப்புரவு நட்பு அடைய - நல்லவராய் மனமொத்த நட்பினைப்
பொருந்துமாறு, நடக்கின்றார் - ஒழுகுவாராகிய திருவாதவூரர், புல்லாதார்
முரண் அடக்கி - பகைவரின் வலியினை அடக்கி, பொருள் கவர்வார்
என்பது எவன் - அவரது பொருளைக் கவர்வார் என்று கருதுவது என்னை?
தீபம்
- கடல் நாப்பணிருக்கும் நிலம். தேத்து - தேசத்து; தேசம்
என்பது தேம் எனத் தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களிற்
பயின்றுள்ளது. யாவரும் இவருடைய நட்பை விரும்பித் தாமாகவே
திறையனுப்புதலின் பகைவர் இலராயினார் என்பதும், பகைவர் இலராகவே
முரணடக்குதலும் பொருள் கவர்தலும் இல்லையாயின என்பதும் கருத்தாகக்
கொள்க. (8)
அண்ணலரி
மருத்தனனுக் கடல்வாத வூரமைச்சர்
கண்ணுமிகு கவசமும்போற் காரியஞ்செய் தொழுகுவார்
தண்ணளிசெய் தவனியெலாந் தன்கிளைபோற் குளிர்தூங்க
வண்ணமதிக் குடைநிழற்றி முறைசெய்து வாழுநாள். |
(இ
- ள்.) அடல் வாதவூர் அமைச்சர் - வெற்றி பொருந்திய
வாதவூரராகிய அமைச்சர், அண்ணல் அரிமருத்தனனுக்கு - பெருமை
பொருந்திய அரிமருந்தன பாண்டியனுக்கு, கண்ணும் இடுகவசமும் போல் -
கண்களையும் அணிந்த கவசத்தையும் போல (இருந்து), காரியம் செய்து
ஒழுகுவார் - வினை செய்து ஒழுகுவாராய், தண் அளி செய்து - தண்ணிய
அருள் புரிதலால், அவனி எலாம் - நிலவுலகிலுள்ள மக்களனைவரும், தன்
கிளைபோல் குளிர்தூங்க - தன் கிளைஞர் மகிழுமாறு போல மகிழ்கூர,
வண்ணம் மதிக்குடை நிழற்றி - நிறம் வாய்ந்த சந்திர வட்டக் குடையினால்
நிழல் செய்து, முறை செய்து வாழு நாள் - முறை புரிந்து வாழும் நாளில்.
|