(இ
- ள்.) புத்தர் ஆதியோர் புற உரை நெறிகளும் - புத்தர்
முதலானவர்களின் வேதாகமங்கட்குப் புறம்பாகக் கூறப்படும் நெறிகளும்,
பொய்யா நித்தவேத நூல் தழுவிய - பொய்யாத உண்மையாகிய மறைநூலைத்
தழுவிய, அகஉரை நெறியும் - அகமாகச் சொல்லப்படும் நெறிகளும், சித்தம்
மாசு அறுத்து அரன் அருள் தெளிவியா - மனத்தின்கண் உள்ள
அழுக்கினைப் போக்கி இறைவன் திருவருளைத் தெளிவுறுத்தமாட்டா;
அதனால் - அம்மாட்டாமையினால், மித்தை ஆணவத் தொடக்கு அறாது -
சடமாகிய ஆணவப் பிணிப்பு நீங்காது; வீடும் இல்லையாம் - (அதனால்)
வீடுபேறும் இல்லையாகும்.
புறவுரை
நெறி புறப்புறம், புறம் என இருவகைப்படும்; உலோகாயதம்,
நால்வகைப் பௌத்தம் (மாத்திய மிகம், யோகாசாரம், சௌத்திராந்திகம்,
வைபாடிகம்), ஆருகதம் என்பன புறப்புறச் சமயங்கள்; தருக்கம், மீமாஞ்சை,
ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்பன புறச்சமயங்கள்.
அகவுரை நெறி அகப்புறம், அகம் என இருவகைப்படும்; பாசுபதம்,
மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், அயிக்கிய வாதசைவம் என்பன
அகப்புறச் சமயங்கள்; பாடாண வாதம், பேதவாதம், சிவசமவாதம்,
சிவசங்கிராந்த வாதம், ஈசுவர வவிகார வாதம், சிவாத்துவித சைவம் என்பன
அகச்சமயங்கள். இந்நாலாறு சமயங்களின் இயல்புகளை யெல்லாம் செந்தமிழ்ச்
சிவஞானபோத முதனூலுக்கு மாதவச் சிவஞான யோகிகள் கண்டருளிய
திராவிட மாபாடியம் என்னும் பேருரையுட் காண்க. மித்தை - பொய், சடம்.
(11)
பத்தி செய்தர னருள்பெறும் பத்தருக் கன்றி
முத்தி யெய்தரி தெனமறை மொழிவதப் பொதுநூற்
சத்தி யப்பொருட் டெளிவெலாஞ் சத்திநி பாதர்க்
குய்த்து ணர்த்துவ தாகம மென்பர்மெய் யுணர்ந்தோர். |
(இ
- ள்.) பத்தி செய்து அரன் அருள் பெறும் பத்தருக்கு அன்றி -
அன்பு செய்து இறைவன் திருவருளைப் பெற்ற அன்பர்கட்கு அன்றி
ஏனையோருக்கு, முத்தி எய்து அரிதென மொழிவது மறை - வீடு பேற்றினை
எய்தல் இல்லை என்று கூறுவது வேதம்; அப்பொது நூல் சத்தியப் பொருள்
தெளிவு எலாம் - அப்பொது நூலின் உண்மைப் பொருட்டெளிவு
அனைத்தையும், சத்திநிபாதர்க்கு - திருவருட் பதிவுடையாருக்கு, உய்த்து
உணர்த்துவது - விளக்கி அறிவிப்பது, ஆகமம் - சிவாகமம்; என்பர் மெய்
உணர்ந்தோர் - என்று கூறுவர் மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோர்.
எய்து,
முதனிலைத் தொழிற் பெயர். வேதம் யாவர்க்கும் உரித்தாகலின்
பொது நூல் எனவும், ஆகமம் சத்தி நிபாத முடையார்க்கு உரித்தாகலின்
சிறப்பு நூல் எனவும் கூறப்படும்; இதனை,
வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள்
வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டும் |
|