220திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) ஆசை வெம்பவ வாசனை அற்று - அவாவினால் வரும்
கொடிய பிறவி வாசனை நீங்கி, மாணிக்க வாசகப் பிரான் - மணிவாசகப்
பெருமானார், தேசிகன் மாணவர் ஓதும் - ஞானாசிரியனது மாணவர்கள்
ஓதுகின்ற, ஓசை ஆகம உபநிடப் பொருள் எலாம் - கேட்டு -
ஒலியினையுடைய ஆகமப் பொருளும் உபநிடதப் பொருளுமாகிய
அனைத்தையும் கேட்டு, நேசம் அங்கு வைத்து இருந்தனர் - அன்பினை
அங்குப் பதிய வைத்து இருந்தனர்; நிருத்தன் அது கண்டு - ஆசிரியனாகிய
கூத்தபிரான் அதனைக் கண்டு

     ஆசையும், பிறவிக்கேதுவாகிய மலவாசனையும் என்னுமாம். தேசிகனும்
மாணவரும் வினா விடைகளாகக் கூறும் என்றுரைத்தலும் பொருந்தும்.
சித்தாந்தப் பொருளும் வேதாந்தப் பொருளும் கேட்டு என்க. உபநிடதம்
எனற்பாலது உபநிடம் என விகாரமாயிற்று. (52)

       [எண்சீரடி யாசிரிய விருத்தம்]
தித்திக்கு மணிவார்த்தை யின்னஞ் சின்னாட்
     டிருச்செவியி லருந்தவுங்கைச் செம்பொ னெல்லாம்
பத்திப்பே ரன்பளித்துக் கவர்ந்து வேண்டும்
     பணிகொடுபாண் டியனையிவர் பண்பு தேற்றி
முத்திக்கே விடுத்திடவும் புத்தை வாது
     முடித்திடவுந் திருவுள்ள முன்ன மெய்தி
எத்தித்தொண் டரைக்கருமஞ் சிறிதுண் டிங்கே
     யிருத்தியென வுருக்கரந்தா னடிய ரோடும்.

     (இ - ள்.) தித்திக்கும் மணிவார்த்தை இன்னம் சில்நாள் திருச்செவியில்
அருந்தவும் - இனிக்கின்ற மாணிக்கம் போலும் வாசகமாகிய அமிழ்தினை
இன்னும் சில நாட்கள் வரையிலும் தமது திருச்செவியாகிய வாயினால்
உண்ணவும், கைச் செம்பொன் எல்லாம் - கையிலுள்ள செம்பொன்
அனைத்தையும், பத்திப்பேர் அன்பு அளித்துக் கவர்ந்து - பத்தி என்னம்
தலையன்பினைத் தந்து கவர்ந்து கொண்டு, வேண்டும் பணிகொடு - தாம்
விரும்பும் பணியை ஏற்றுக் கொண்டு, பாண்டியனை இவர் பண்புதேற்றி -
பாண்டியனுக்கு இவர் பண்பினை அறிவித்து, முத்திக்கே விடுத்திடவும் -
வீட்டின்கட் செலுத்தவும், புத்தைவாது முடித்திடவும் - புத்தரை வாதின்கண்
வென்று அழிக்கவும், திருவுள்ளம் முன்னம் எய்தி - திருவுள்ளத்திற் கருதி,
தொண்டரை - வாதவூரடிகளை, கருமம் சிறிது உண்டு - சிறிது காரியம்
உளது (ஆதலால்), இங்கே இருத்தி என - இங்கு இருப்பாயாக என்று,
எத்தி - விரகு செய்து, அடியாரோடும் உருக்கரந்தான் - அடியார்களோடும்
மறைந்தருளினான்.

     வார்த்தை, கருவியாகு பெயர். அன்பு அளித்துச் செம்பொன் கவர்ந்து
என்றது பரிவருத்தனை. பாண்டியனை, முத்திக்கு என்பன வேற்றுமை
மயக்கம், புத்து, சமண் என்பது போல் நின்ற குழூஉப் பெயர். முன்னம் -