"மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ
னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை
யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்மை
யன்பருன் மெய்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவதோ
சொலாய் பொருத்த மாவதே" |
என்னும் பாசுரத்தாலும்,
என் குறையன்றி நின்னால்யாதுங் குறையில்லை
என்னும் கருத்து,
"என்னா லறியாப் பதந்தந்தா யான தறியா தேகெட்டேன்
உன்னா லொன்றுங் குறைவில்லை யுடையா யடிமைக் காரென்பேன்
பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழைய வடியா ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங் கிருந்தே னோய்க்கு விருந்தாயே" |
என்னும் பாசுரத்தாலும்
திருவாசத்தில் அடிகளால் அருளிச்
செய்யப்பட்டிருத்தல் காண்க. துன்பத்து என அத்துச்சாரியை அல்வழிக்
கண் வந்தது. அழுவம் - பரப்பு; கடல். எதுகை நோக்கிப் பிறிவு என
வலியாயிற்று. (56)
[கலிப்பா] |
மண்ணாதி
யாறாறு மனந்துழாவித் தடுமாறிப்
புண்ணாகி யெனைக்காணா துழல்கின்றேனைப் போதவருட்
கண்ணா லவைமுழுதுங் கரையநோக்கி யான்யானென்
றெண்ணா வெனைத்தந்தா யெங்குற்றாயோ வெந்தாயே. |
(இ
- ள்.) மண் ஆதி ஆறாறும் - நிலம் முதலிய முப்பத்தாறு
தத்துவங்களிலும், மனம் துழாவி - மனத்தால் ஆராய்ந்து, எனைக் காணாது
- என்னைக் காண மாட்டாது, தடுமாறி புண்ணாகி உழல்கின்றேனை -
கலங்கி வருந்திச் சுழலுமென்னை, போத அருள் கண்ணால் - ஞான
அருணோக்கினால், அவை முழுது கரைய நோக்கி - அத் தத்துவங்கள்
முற்றும் கரையும்படி நோக்கி யருளி, யான் யான் என்று எண்ணா எனைத்
தந்தாய் - யான் யான் என்று கருதாத என்னைக் காட்டியருளினையே;
எந்தாய் எங்கு உற்றாயோ - எந்தையே எங்குச் சென்றனையோ.
மண்ணாதி
ஆறாறு - நிலம் முதல் நாதம் ஈறாகிய முப்பத்தாறு
தத்துவங்கள்; ஆறாறு, ஆகுபெயர், தத்துவங்களில் ஒரோ வொன்றையே
நான் என மயங்கிப் பின் ஆராய்ந்து என்னைக்காணாது உழல்கின்றேனை
என்க. இச் செய்யுளிலும் வருஞ் செய்யுள் இரண்டிலும் தத்துவ ரூபம் முதலிய
தச காரியங்கள் ஒருவாறு அமைந்திருத்தல் உய்த்துணரற்பாலன. போதமாகிய
அருள். தத்துவங்கள் கரைய என்றமையால் மந்திரம், பதம், வன்னம்,
புவனம்,
|