(இ
- ள்.) என்று வாய் திறந்து அரற்றினார் இரங்கினார் - என்று
வாய் திறந்து கதறி வருந்தி, புனிற்றுக்கன்று நீங்கிய ஆன் என -
இளங்கன்று நீங்கின பசுவைப்போல, கரைந்த நெஞ்சினராய்ச் சென்று -
உருகிய மனத்தினை யுடையராய்ச் சென்று, கோபுரவாயிலின் புறம்பு போய்
- கோபுரவாயிலுக்கு வெளியே போய், திரண்டு நின்ற காவலன் தமர்களை
நேர்ந்தனர் நோக்கா - அங்கே கூடி நின்ற அரசன் பரிசனங்களை நேர்ந்து
பார்த்து.
புனிற்றுக்
கன்று - ஈன்றணிமையுடைய கன்று. அரற்றினார்,
இரங்கினார், நேர்ந்தனர் முற்றெச்சங்கள். (60)
துங்க வாரியிற் கடும்பரித் தொகையெலா மாடித்
திங்க ளின்றலை வருமென முன்புபோய்த் தென்னர்
புங்க வன்றனக் குணர்த்துமின் போமென விடுத்தார்
அங்க ணாயகன் பெருந்துறை நாயக னன்பர்.
|
(இ
- ள்.) கடும் பரித் தொகை எலாம் - விரைந்த செலவினையுடைய
குதிரைக் கூட்டங்களெல்லாம். ஆடித் திங்களின் தலை - ஆடிமாதத்தில்,
துங்கவாரியில் வரும் என - சிறந்த கடற்றுறையின்கண் வந்திறங்குமென்று,
முன்புபோய் - முன்னர்ச்சென்று, தென்னர் புங்கவன் தனக்கு உணர்த்துமின்
- பாண்டியர் பெருமானுக்குக் கூறுங்கள்; போம் என விடுத்தார் - போமின்
என்று கூறி அனுப்பினார்; அங்கண் நாயகன் பெருந்துறை நாயகன் அன்பர்
- அழகிய அருட் கண்ணையுடைய தலைவனாகிய பெருந்துறை நாதனுக்கு
அன்பராகிய மணிவாசகனார்.
வாரியினின்று
இறங்கும் பரியெல்லாம் ஆடித்திங்களில் வரும் எனவும்,
பரியெல்லாம் வாரியினின்று ஆடித்திங்களில் இறங்கும் எனவும் இருபொருள்
தோன்றக் கூறினமை காண்க. சௌரமானத்தால் ஆடிமாதமாவது
சாந்திரமானத்தால் ஆவணிமாதமாகுதலின் பரியெலாம் ஆடித்திங்களில்
வருமென்ற கூற்றும் தவறுபடாமை பெற்றாம். தலை, ஏழனுருபு. போமின்
எனற்பாலது போம் என நின்றது; வழக்கில் வந்த செய்யுமென்னும்
வாய்பாட்டேவலுமாம். (61)
புரசை மாவயப் புரவிதேர்ப் பொருநர்போய்ப் பொறிவண்
டிரைசெய் தார்முடி வேந்தன்முன் னிறைஞ்சினா ருள்ள
துரைசெய் தாரது கேட்டொன்று முரைத்தில னிருந்தான்
நிரைசெய் தார்ப்பரி வரவினை நோக்கிய நிருபன். |
(இ
- ள்.) புரசைமாவயப்புரவி தேர்ப்பொருநர் போய் - கழுத்திடு
கயிற்றையுடைய யானைகளையும் வெற்றியையுடைய குதிரைகளையும்
தேர்களையுமுடைய வீரர்கள் சென்று, பொறி வண்டு இரைசெய் தார்
முடிவேந்தன் முன் இறைஞ்சினார் - பொறிகளையுடைய வண்டுகள்
ஒலித்தலைச்செய்யும் மாலையையணிந்த முடியினை யுடைய அரிமருத்தன
பாண்டியன் முன் வணங்கி, உள்ளது உரை செய்தார் - நடந்ததைக்
கூறினார்; அது கேட்டு ஒன்றும் உரைத்திலன் இருந்தான் - அதனைக்
கேட்டு
|