நல்கி - விரும்பத்
தக்க ஆடைகளையும் கொடுத்து. அமைச்சரை
மகிழ்வித்தான் - மந்திரியாராகிய வாதவூரடிகளை மகிழ்வித்தனன். மாக்கடல்
- குதிரையாகிய கடல். வருகின்றன என என்க. திருத்து - திருந்த அணிந்த.
(64)
ஏந்தரி
யணைநீங்கி யெழுதிய தலைவாயிற்
போந்தரு கொளிர்மாடம் புகுந்தரி யணைமேவிக்
காந்தளின் விரனல்லார் கவரிகள் புடைவீச
ஆய்ந்தவர் புறஞ்சூழ வடுபரி வரவேற்பான். |
(இ
- ள்.) அரி ஏந்து அணை நீங்கி - சிங்கஞ் சுமந்த
ஆதனத்தினின்றும் எழுந்து, எழுதிய தலைவாயில் போந்து - சித்திரம்
எழுதிய தலைவாயிலில் வந்து, அருகு ஒளிர் மாடம் புகுந்து - அதனருகில்
ஒளி வீசும் மாடத்திற் புகுந்து, அரி அணைமேவி - சிங்காதனத்திலிருந்து,
காந்தளின் விரல் நல்லார் - செங்காந்தள் மலர் போன்ற விரல்களையுடைய
பெண்கள், புடை கவரிகள்வீச - இருமருங்கிலும் கவரிகள் வீசவும்,
ஆய்ந்தவர் புறம் சூழ - நூலாராய்ந்த அமைச்சர் முதலியோர் புறத்தில்
சூழவும், அடுபரி வரவு ஏற்பான் - வெற்றி பொருந்திய பரிகளை வரவேற்
பானாயினன்.
ஆய்ந்தவர்
- நூல்களை ஆராய்ந்தறிந்த அமைச்சர், புரோகிதர், புலவர்
முதலாயினார். (65)
பரனருள் விளையாடல் காட்டிய பரிவெள்ளம்
வருவன சிறுகாலந் தாழ்த்தலு மதிவேந்தர்
புரவலன் மனம்வெள்கிப் பொய்யிது வெனவுள்கி
அருகணை யுழையோரைக் குறித்தன னழல்கண்ணான். |
(இ
- ள்.) பரன் அருள் விளையாடல் காட்டிய - இறைவன் தனது
திருவிளையாடலைக் காட்டா நிற்க, வருவன பரிவெள்ளம் - வருகின்ற
குதிரை வெள்ளம், சிறுகாலம் தாழ்த்தலும் - சிறிது போது வரவு தாழ்த்த
வளவில், மதிவேந்தர் புரவலன் - மதிவழி மன்னருட் சிறந்தவனாகிய
அரிமருத்தன பாண்டியன், மனம் வெள்கி - உள்ளம் நாணி, இது பொய் என
உள்கி - இது பொய் என்று கருதி, அருகு அணை உழையோரை -
அருகிலிருந்த தண்டலாளரை, அழல் கண்ணான் குறித்தனன் -
நெருப்புப்போலுஞ் சிவந்த கண்களை யுடையனாய் நோக்கினன்.
காட்டிய,
செய்யிய வென்னும் வினை யெச்சம். உழையோர் -
தண்டலாளர். குறித்தனன் - குறிப்புடன் நோக்கினன். (66)
|