நரி பரியாக்கிய படலம்299



வாங்க வெள்குவரோ என்றார். இது பழிப்பதுபோல இறைவனது அடியார்க்
கெளியனாம் கருணைத்திறத்தை வியந்து கூறியவாறு. பாணபத்திரனுக்கு ஏவல்
செய்தமையை விறகு விற்ற படலத்திற் காண்க. கூசு, முதனிலைத் தொழிற்
பெயர். இலா, ஈறுகெட்ட எதிர் மறை வினை யெச்சம். கங்கை வெண்ணிற
முடையதாகலின் ‘கங்கை யென’ என்றார் துகிலின் தூய்மை கூறியவாறு
மாயிற்று. (123)

இனையதூ சிவன்பா லூர்தி யிழிந்துநின் றேற்றுச் சென்னி
புனைவதென் னிவர்கை யோடும் புனைந்ததிக் குடையும் பூண்ட
கனலராப் பூணு மன்னன் கவருமோ வென்று தம்மின்
வினவினர் வெகுண்டு சொன்னார் கணத்தனி வீர ரெல்லாம்.

     (இ - ள்.) கணத்தனிவீரர் எல்லாம் - ஒப்பற்ற கணவீரரனைவரும்,
இனைய தூசு இவன்பால் ஊர்தி இழிந்து நின்று ஏற்றுச் சென்னி புனைவது
என் - இவ் விழிந்த ஆடையை இம்மன்னனிடம் குதிரையினின்றும் இறங்கி
எளியன் போல நின்று வணக்கத்துடன் வாங்கி முடின்கண் சூடியது எதன்
பொருட்டு, இவர்கை ஓடும் புனைந்த திக்கு உடையும் - (அங்ஙனம்
ஏற்காவிடின்) இவர்கையிலுள்ள ஓட்டினையும் அணிந்த திக்காடையையும்,
பூண்ட கனல் அராப்பூணும் - அணிந்த அனல் போலும் சினமுடைய
பாம்பணிகளையும், மன்னன் கவருமோ - இவன் கொள்ளை கொள்வானோ,
என்று வினவினர் வெகுண்டு சொன்னார் - என்று ஒருவரோ டொருவர்
வினவிச் சினந்து கூறினர்.

     தூசினையும் அரசனையும் சிறுமைப்படுத்து ‘இனைய தூசு’ எனவும்,
‘இவன் பால்’ எனவும் கூறினர். ஊர்தியிழிதல், நிற்றல், ஏற்றல், சென்னி
புனைதல் ஆகிய யாவும் இவர் பெருமைக் கொவ்வாதன என்றாரென்க.
அங்ஙனம் ஏற்காவிடில் இவர் கையோடு முதலியவற்றைக் கவர்வான் என்று
அஞ்சினரோ என வெகுளியில் நகை தோன்றக் கூறினர். இதனால்
ஆண்டவனுடைய இறைமையை விளக்கிய வாறுமாயிற்று. திக்குடை -
திசையாகிய உடை; ஆடையின்மை. (124)

அறந்தரு கோலான் வெவ்வே றடுபரி வயவர் யார்க்கும்
நிறந்தரு கலிங்க மீந்தா னேர்ந்தவை வாங்கி யன்பிற்
சிறந்தருள் வடிவாய் வந்தார் செழுமறைப் புரவி யோடு
மறைந்தனர் மறைந்தா ரொக்க மாயவாம் பரிமேல் வந்தார்.

     (இ - ள்.) அறம் தருகோலான் - அறநெறியினின்றும் வழுவாது
பேணுதலால் குடிகட்கு இன்பந்தருஞ் செங்கோலை யுடைய பாண்டியன்,
வெவ்வேறு அடு பரிவயவர்யாக்கும் நிறம் தரு கலிங்கம் ஈந்தான் - வேறு
வேறு வெற்றி பொருந்திய பரிவீரரனைவருக்கும் ஒளியினையுடைய
ஆடைகளைக் கொடுத்தான்; அன்பில் சிறந்து அருள் வடிவாய் வந்தார் -
அன்பினாற் சிறந்து அருளுருவாய் வந்த இறைவர், நேர்ந்து அவை வாங்கிச்
செழுமறைப் புரவியோடு மறைந்தனர் - முன்சென்று அவற்றை வாங்கிக்
கொண்டு அழகிய வேதப் பரியுடன் மறைந்தருளினர்; மாய வாம்பரிமேல்