வந்தார் - மாயமாகி
தாவுகின்ற குதிரையில் வந்த கணவீரரனைவரும், ஒக்க
மறைந்தார் - கூடவே மறைந்தனர்.
வெவ்வேறு
நிறத்தரு கலிங்கம் என்றுமாம், அவர்கள் வெகுண்டு
நின்றமையால் இறைவனே அவற்றையும் நேர்ந்து வாங்கினர் என்க. வாங்கி
என்பதனை வாங்க என எச்சத்திரிபாக்கி உரைப்பாருமுளர். அன்பிற் சிறந்து
- அன்பிற்கு ஈடுபட்டு. ஒக்க - உடன்; சேர. இறைவன் இங்ஙனம் நரிகளைக்
குதிரைகளாக்கிக் கொணர்ந்த திருவிளையாட்டை,
ழுஅரியொடு பிரமற் களவறி யொ ண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்ழு |
எனவும்,
ழுநரியைக் குதிரைப் பரியாக்கி
ஞால மெல்லா நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்ழு |
எனவும் அடிகள் திருவாசகத்தில்
அருளிச்செய்தல் காண்க. (125)
இருமைக்குந் துணையாய் நின்ற விருபிறப் பாளர்க் கேற்ப
அருமைத்தாஞ் சிறப்பு நல்கி யவரிடத் தவரை யுய்த்துப்
பருமத்த யானை வேந்தன் பகற்கதிர் வானத் துச்சி
வருமப்போ தெழுந்து செம்பொன் மாடநீள் கோயில் புக்கான். |
(இ
- ள்.) இருமைக்கும் துணையாய் நின்ற இருபிறப்பாளர்க்கு -
இம்மையு மறுமையுமாகிய இரண்டிற்குந் துணையாய் நின்ற மறையவராகிய
வாதவூரர்க்கு, ஏற்ப - பொருந்துமாற்றால், அருமைத்து ஆம் சிறப்பு நல்கி -
அருமையையுடைய தாகிய வரிசையை அளித்து, அவரை அவரிடத்து உய்த்து
- அவரை அவரிடத்திற்குச் செல்ல விடுத்து, பருமத்த யானை வேந்தன் -
தவிசினையுடைய யானையையுடைய மன்னன், பகல் கதிர் வானத்து
உச்சிவரும் அப்போது எழுந்து - சூரியன் வானின் உச்சியில் வருகின்ற
அப்பொழுதில் எழுந்து, செம்பொன் மாடம் நீள் கோயில் புக்கான் - சிவந்த
பொன்னாலாகிய மாடத்தையுடைய நீண்ட அரமனையிற் புகுந்தான்.
பருமத்த,
குறிப்புப்பெயரெச்சம்; பருமம் - யானைமேற்றவிசு; பரு மத்த
எனப் பிரித்துப் பருத்த மதமயக்கத்தையுடைய யானை என்றலுமாம். (126)
ஏனைமந் திரருந் தத்த மில்புகப் புரவி பார்த்த
மாநக ராருந் தத்த மனைபுகப் பரியின்பாகர்
ஆனவர் தாமுங் கோயி லடைந்துதம் விளையாட் டெல்லாம்
மீனெடுங் கண்ணி னாட்கு விளம்பின ரிருந்தா ரன்றே. |
|