இவன் தான் இந்திர
சாலம் காட்டும் சித்தனோ என்பார் - (அன்றி) இவன்
இந்திரசாலங் காட்டுகின்ற சித்தனோ வென்று செப்புவர்; ஆர் என்றும்
தெளியோம் என்பார் - இவருள் யாரென்றுந் தெரிந்திலோம் என்று கூறுவர்.
தான்
நான்கும் அசை. பேய்கோட்பட்ட, தம்மினாகிய தொழிற்சொல்
வர வலிஇயல்பாயிற்று. அலைப்பான், வினையெச்சம். எத்தன் -
ஏமாற்றுவோன். (43)
பாடல்விஞ் சையனோ வென்பார் பண்ணினாற் பாணிக் கேற
ஆடல்விஞ் சையனோ வென்பா ரரும்பெறற் செல்வத் தாழ்ந்து
வாடிய மகனோ வென்பா ரிசைபட வாழ்ந்து கெட்ட
ஏடவிழ் தாரி னாருள் யார்மக னிவன்கொ லென்பார். |
(இ
- ள்.) பாடல் விஞ்சையனோ என்பார் - பாடலில் வல்ல
கந்தருவனோ வென்று பகருவார்; பண்ணினால் பாணிக்கு ஏற ஆடல்
விஞ்சையனோ என்பார் - பண்ணோடு தாளத்துக்குப் பொருந்த ஆடுதலில்
வல்ல பரதநூற் புலவனோ வென்று அறைகுவார்; அரும் பெறல் செல்வத்து
ஆழ்ந்து - (முன்னே) பெறுதற்கரிய செல்வப் பெருக்கில் அழுந்தி,
வாடியமகனோ என்பார் - (பின்) அச்செல்வங் குன்றிய மகனோ வென்று
செப்புவார்; இசைபட வாழ்ந்து கெட்ட ஏடு அவிழ் தாரினாருள் -
புகழுண்டாக வாழ்ந்து பின் அவ்வாழ்க்கை கெட்ட இதழ்விரிந்த மாலையை
யணிந்த மன்னருள், இவன் யார் மகன்கொல் என்பார் - இவன் யார்
மகனோ என்று சொல்லுவார்.
ஆல்
ஒடுவின் பொருட்டு. பாணி - தாளம். ஏற - பொருந்த. கெட்ட
என்னும் பெயரெச்சம் தாரினார் என்பதன் விகுதியோடியையும். இவன்
யார்மகன் கொல் என மாறுக. (44)
கரும்பனும் விரும்ப நின்ற கட்டழ குடைய னென்பார்
அரும்பெற லிவன்றான் கூலிக் காட்செய்த தெவனோ வென்பார்
இரும்பெருங் குரவ ரற்ற தமியனோ வென்பார் வேலை
புரிந்தவ னல்ல னென்பா ரதுமேனி புகலு மென்பார். |
(இ
- ள்.) கரும்பனும் விரும்பநின்ற கட்டழகு உடையன் என்பார் -
மதவேளும் விரும்புமாறு நின்ற பேரழகுடையனென்று பேசுவார்;
அரும்பெறல் இவன் தான் - பெறுதற்கரிய இவன், கூலிக்கு ஆட்செய்தது
எவனோ என்பார் - கூலியின் பொருட்டு ஆளாக வந்து வேலை செய்தது
யாது காரணமோ என்று கூறுவார்; இரும்பெரும் குரவர் அற்ற
தமியனோவென்று என்பார் - தாயுந் தந்தையுமாகிய இருமுது குரவரும்
இல்லாத தனியனோவென்று சாற்றுவார்; வேலை புரிந்தவன் அல்லன்
என்பார் - இவன் இதற்கு முன் வேலை செய்தவனல்ல னென்று விளம்புவார்;
அது மேனிபுகலும் என்பார் - அதனை இவன் திருமேனியே செப்புகின்றது
எனச் சொல்லுவார்.
|