மாற்றம் - இறைவன்
கூறியருளிய மொழி, இரு செவி நிரம்ப - இரண்டு
செவிகளிலும் நிரம்ப, தென்னன் - பாண்டியன்.
வாழ்கென்று,
அகரம் தொகுத்தல், கூறலுற்ற இறையவன் மொழிந்த
மாற்றம் என்க. (66)
அச்சமுற் றுவகை யீர்ப்ப வதிசய வெள்ளத் தாழ்ந்து
பொச்சமி லன்ப ரெங்குற் றாரெனப் புகுந்து தேடி
நச்சர வசைத்த கூட னாயகன் கோயி னண்ணி
இச்சையி* லிருக்கின் றாரைக் கண்டுபோ யிறைஞ்சி வீழ்ந்தான். |
(இ
- ள்.) அச்சம் உற்று உவகையீர்ப்ப - அஞ்சுதலைப் பொருந்தி
மகிழ்ச்சியானது இழுக்க, அதிசய வெள்ளத்து ஆழ்ந்து - வியப்பாகிய
வெள்ளத்துள் அழுந்தி, பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் என -
பொய்யில்லாத (மெய்) அன்பினையுடைய அடிகள் எங்குச் சென்றாரென்று,
புகுந்து தேடிப்போய் - பல விடங்களிலும் தானே புகுந்து தேடிச் சென்று,
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன்கோயில் நண்ணி - நஞ்சினையுடைய
பாம்பினைக் கச்சாகக் கட்டிய நான் மாடக் கூடலில் எழுந்தருளிய
சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலை அடைந்து, இச்சையில்
இருக்கின்றாரைக்கண்டு - தமது விருப்பின்படியே சிவயோகத்திலிருக்கும்
வாதவூரடிகளைப் பார்த்து, இறைஞ்சி வீழ்ந்தான் - வீழ்ந்து வணங்கினான்.
அச்சமும்,
உவகையும், அதிசயமும் ஒன்றினொன்று மிக என்றபடி.
நஞ்சு நச்சு என வலித்தது. நண்ணி இருக்கின்றாரை எனவும், நண்ணிக்கண்டு
எனவும் இயையும், இச்சையில் - விரும்பியவாறு. (67)
பதொல்லைநீ ருலக மாண்டு சுடுதுயர் நரகத் தாழ
வல்லவென் னறிவுக் கேற்ற வண்ணமே செய்தே னீரென்
எல்லைதீர் தவப்பே றாய்வந்த திகபர வேது வாகி
அல்லல்வெம் பிறவி நோய்க்கு மருமருந் தானீ ரையா. |
(இ
- ள்.) ஐயா - ஐயனே, தொல்லை நீர் உலகம் ஆண்டு -
பழையகடல் சூழ்ந்த இந்நிலவுலகினை ஆண்டு, சுடுதுயர் நகரத்து ஆழவல்ல
- வருத்துந் துன்பத்தையுடைய நிரயத்தின்கண் அழுந்துதற்குவல்ல, என்
அறிவுக்கு ஏற்றவண்ணமே செய்தேன் - எனது புல்லறிவுக்குப்
பொருந்தியபடியே உமக்குத் தீங்கு செய்தேன்; நீர் என்எல்லை தீர்தவப்
பேறு ஆய் - நீவிர் எனது அளவிறந்த தவப்பயனாகி, வந்து - அமைச்சராக
வந்து, இகபர ஏதுவாகி - இம்மைப் பயனுக்கும் மறுமைப் பயனுக்கும்
காரணமாய், அல்லல் வெம்பிறவிநோய்க்கும் - துன்பமயமாகிய
கொடியபிறவிப் பிணிக்கும், அருமருந்து ஆனீர் - அரிய மருந்து
ஆகாநின்றீர்.
(பா
- ம்.) * விச்சையில்.
|