மண் சுமந்த படலம்365



     (இ - ள்.) வந்த இப் பத்தியாலே - இங்ஙனம் விளைந்த
இவ்வன்பினாலே, மாயையின் விருத்தியான - மாயையின் விருத்தியாகிய,
பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளைவினுள் பட்ட துன்பம் வெந்தது -
கட்டாகிய உலகவாழ்க்கை நிகழ்ச்சியில் உண்டாகிய துன்பம் வெந்து
நீறாகியது; மெய் உணர்வு இன்பம் கருணை ஆகி - சச்சிதானந்தப்
பரம்பொருள் அருள்வடி வெடுத்துவந்து, தன்னைத் தந்தது - தன்னை
எனக்குக் கொடுத்து, பாதம் சூட்டி - தனது திருவடியை எனது முடியிற்
சூட்டி, தன்மயம் ஆக்கிற்று - தன் மயமாக்கியது.

     விருத்தி - படம் குடிலானாற் போல்வது; ஈண்டுப் பரிணாமமும்
கொள்க. பிரபஞ்சம் என்பது பவஞ்சம் என்றாயிற்று. பிரபஞ்சம் மாயேய
மலமாதலின் ‘பந்தமாம் பவஞ்சம்’ என்றார். மெய் உணர்வு இன்பம் - சத்து
ஆனந்தம்; சச்சி தானந்தம். தன்மயமாக்கல் - சிவமாக்கல்;

" சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே"

என்னும் திருவாசகமும் காண்க. (72)

சச்சிதா னந்த மாமத் தனிப்பர சிவனே தன்ன
திச்சையா லகில மெல்லாம் படைத்தளித் தீறு செய்யும்
விச்சைவா னவரைத் தந்த மேலவன் பிறவித் துன்பத்
தச்சமுற் றடைந்தோர்க் கானா வின்பவீ டளிக்கு மன்னோன்.

     (இ - ள்.) சச்திதானந்தமாம் அத்தனிப் பரசிவனே -
சச்சிதானந்தமாகிய அந்த ஒப்பற்ற பரசிவனே, தன்னது இச்சையால் - தனது
இச்சையினாலே, அகிலம் எல்லாம் டைத்து அளித்து ஈறுசெய்யும் விச்ச
வானவரை - உலகமனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும்
தொழிலையுடைய அயனும் அரியும் அரனுமாகிய தேவர்களை, தந்தமேலவன்
- உண்டாக்கிய மேலோன்; பிறவித்துன்பத்து அச்சமுற்று அடைந்தோர்க்கு -
பிறவித்துன்பத்திற்கு அஞ்சி வந்தவர்களுக்கு, ஆனா இன்பவீடு அளிக்கும்
அன்னோன் - நீங்காத இன்பத்தையுடைய வீடு பேற்றினை அளிக்கிற்
அவ்விறைவன்.

     தன்னது, னகரம் விரித்தல். விச்சை - ஞானம்; ஈண்டுத்தொழில்.
இச்சையால் தந்த மேலவன் என்க. துன்பத்து என்பதனோடு
இரண்டனுருபேனும் ஐந்தனுருபேனும் விரித்துரைத்தலுமாம்;

"அச்சந் கிளவிக் கைந்து மிரண்டும்
எச்ச மிலவே பொருள்வயி னான"

என்பது தொல்காப்பியம். (73)

மந்தரங் கயிலை மேருப் பருப்பதம் வார ணாசி
இந்தநல் லிடங்க டோறு மிகபர போகம் யார்க்குந்
தந்தருள் செய்தெம் போல்வார் தம்மனம் புறம்போ காமற்
சிந்தனை திருத்தி ஞானத் திருவுரு வாகி மன்னும்.