அன்றுகுருந் தடியிலடி வைத்தாண்ட
கோலமே யருளா னந்த
மன்றினிடத் தெதிர்தோற்றி வாவென்பா
ரெனமூரன் மணிவாய் தோற்றி*
நின்றதனிப் பெருங்கூத்தர் நிலைகண்டா
ரஞ்சலித்தார் நிலமேல் வீழ்ந்தார்
ஒன்றரிய புலன்கரண வழிநீந்தி
மெய்யன்பி னுருவ மானார். |
(இ
- ள்.) அன்று குருந்து அடியில் அடி வைத்து ஆண்ட கோலமே
- அன்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் திருவடியை
முடியின் கண் சூட்டி ஆட்கொண்டருளிய திருக்கோலமே, அருள்
ஆனந்தமன்றினிடத்து எதிர் தோற்றி - அருளானந்த மயமாகிய
அம்பலத்தின்கண் எதிரே தோன்றி, வா என்பார் என - வா என்று
அழைப்பார் போல, மணிவாய் மூரல் தோற்றி நின்ற - அழகிய
திருவாயின்கண் புன்னகை காட்டி நின்றருளிய, தனிப் பெருங்கூத்தர் நிலை
கண்டார் - ஒப்பற்ற பெரிய கூத்தப் பெருமானது திருக்கோலத்தினைக்
கண்டு, அஞ்சலித்தார் நிலமேல் வீழ்ந்தார் - கைகளை முடியிற் குவித்து
நிலத்தின்மேல் வீழ்ந்து, ஒன்று அரிய புலன்கரண வழி நீந்தி - ஒன்று
படுதலில்லாத ஐம்புலன்களும் அந்தக் கரணங்களுமாகிய இவற்றின் வழிச்
செல்லுதலைக் கடந்து, மெய் அன்பின் உருவம் ஆனார் - உண்மையன்பின்
வடிவமாயினார்.
கோலமே
நின் என இயையும். வா வென்பாரென என்னுங் கருத்தை.
"சென்று தொழுமின்கள் தில்லையுட்சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே" |
என்னும் திருநாவுக்கரசர்
தேவாரத்திற் காண்க. (93)
வண்டுபோற் புண்டரிக மலரில்விளை
சிவானந்த மதுவை வாரி
உண்டுவா சகம்பாடி யாடியழல்
வெண்ணெயென வுருகுந் தொண்டர்
விண்டுழா வியகுடுமி மன்றுடையான்
றிருவாக்கான் மிகுந்த நேயங்
கொண்டுபோய்க் குணதிசையி லருந்தவர்வாழ்
தபோவனத்தைக் குறுகி யங்கண். |
(இ
- ள்.) வண்டுபோல் - வண்டினைப்போல, புண்டரிகமலரில்விளை
சிவானந்த மதுவை வாரி உண்டு - தில்லைவனமாகிய தாமரை மலரில்
விளைந்த சிவானந்தமாகிய தேனை வாரி உண்டு, வாசகம் பாடி ஆடி -
(பா
- ம்.) * தோன்றி
|