திருவாசகம்பாடி இன்பக்
கூத்தாடி, அழல் வெண்ணெய் என உருகும்
தொண்டர் - நெருப்பிற் பட்ட வெண்ணெய் போல மனமுருகுந்
தொண்டராகிய மாணிக்க வாசகர், விண் துழாவியி குடுமி மன்று உடையான்
திருவாக்கால் - வானை யளாவிய முடியினையுடைத்தாகிய பொன்னம்பலத்தை
யுடைய இறைவனது திருவாக்கினால், மிகுந்தநேயம் கொண்டு போய் -
மிகுந்த அன்பு கொண்டு சென்று, குணதிசையில் அருந்தவர் வாழ்
தபோவனத்தைக் குறுகி - கீழத்திசையில் அரிய தவத்தையுடைய முனிவர்கள்
வாழும் தவவனத்தை அடைந்து, அங்கண் - அவ்விடத்தில்.
புண்டரிக
மலர் என்பது இரட்டுற மொழிதலால் தில்லை வனத்தையும்
தாமரை மலரையும் குறிக்கும். சாந்தோக்கிய உபநிடதத்திலே பிரமபுரமாகிய
இச்சரீரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள் இருக்கும் ஆகாசம்
என்பது முதலாகத் தகரவித்தை கூறப்பட்டது. அதுபோல
இப்பிரமாண்டத்தினுள் இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு எனவும்,
இத்தில்லை வனத்தில் நிருத்தஞ் செய்யும் சிவம் ஆகாசம் எனவும் கூறப்படும்
என்க; ஆறுமுகநாவலரவர்கள் எழுதிய பெரிய புராண வசனத்தில் இது
விரித்துரைக்கப் பெற்றமை காண்க. வண்டு போல் உண்டுஎன இயையும். (94)
குறிகுணங்கள் கடந்ததனிக் கூத்தனுரு
வெழுத்தைந்தின் கொடுவா ளோச்சிப்
பொறிகரணக் காடெறிந்து வீசிமனப்
புலந்திருத்திப் புனிதஞ் செய்து
நிறைசிவமாம் விதைவிதைத்துப் பசுபோதங்
களைந்தருணன் னீர்கால் பாய
அறிவுருவாய் விளைந்ததனிப் பரானந்த
வமுதருந்தா தருந்தி நின்றார். |
(இ
- ள்.) குறி குணங்கள் கடந்ததனிக் கூத்தன் உரு - குறியையுங்
குணத்தையுங் கடந்த ஒப்பற்ற கூத்தப் பெருமானது வடிவமாகிய, எழுத்து
ஐந்தின் - திருவைந் தெழுத்தென்னும், கொடுவாள் ஓச்சி - வளைந்த
வாளினை ஓச்சி, பொறி கரணக்காடு எறிந்து வீசி - ஐம்பொறிகளும் அந்தக்
கரணமுமாகிய காட்டினை முற்றும் அழித்து, மனப்புலம் திருத்தி - மனமாகிய
நிலத்தினைச் செப்பஞ் செய்து, புனிதம் செய்து - தூய்மை செய்து, நிறை
சிவமாம் விதைவிதைத்து - எங்கும் நிறைந்த சிவமாகிய வித்தினை விதைத்து,
பசுபோதம் களைந்து - சீவபோதமாகிய களையினைக் களைந்தெடுத்துவிட்டு,
அருள் நல்நீர்கால்பாய - அருளாகிய நல்ல நீர் பாய்தலால், அறிவு உருவாய்
விளைந்த - அறிவே வடிவமாய் விளைந்த, தனிப்பரானந்த அமுது - ஒப்பற்ற
சிவபோகமாகிய அமுதினை, அருந்தாது அருந்தி நின்றார் - இடையறாமல்
அருந்தி நின்றனர்.
இறைவன்
குறி குணங்கள் கடந்தவனாதலை.
"குறியொன்று மில்லாத கூத்தன்"
"குணங்கள்தா மில்லா இன்பமே" |
|