(இ
- ள்.) எந்தை அவர் செய் வெந்த வேதனையின் உய்ந்தநீர் -
எம்மப்பரே, - அச்சமணர் செய்த கொடிய துன்பத்தினின்றும்
இறைவனருளாற் றப்பிய நீவிர், எம்பெருமான் அருள் இலார் போல - எமது
பெருமான் திருவருளைப் பெறாதார் கூறுவதுபோல, இன்னணம் இசைப்பது
என் - இங்ஙனம் கூறுவது என்னோ, நாள் கோள் விலங்கு புள் - நாள்களுங்
கோள்களும் விலங்குகளும் பறவைகளும், அவுணர் பேய் பூதம் அந்தம்இல்
பலவும் - அவுணர்களும் பேய்களும் பூதங்களும் இவைபோன்ற அளவிறந்த
பலவும், அம்மையோடு அப்பன் ஆணையால் நடப்பன - அம்மையோடு
அப்பனாயுள்ள இறைவன் ஆணையினாலே நடப்பன; அவர் நம் சிந்தையே
கோயில் கொண்டு வீற்றிருப்ப - அவ்விறைவர் நமது மனத்தையே
கோயிலாகக் கொண்டு வீற்றிருத்தலால், தீங்கு இழையா என எழுந்தார் -
அவை தீங்கு புரியாவெனப் பதிகங் கூறிப் புறப்பட்டனர்.
எந்தையாகிய
எம்பெருமான் என்றுமாம். இறைவனருளுடையார்க்கு
யாதொன்றானும் துன்பமுண்டாகா தென்பதற்குச் சமணர் புரிந்த
கொடுந்துன்பங் களினின்றும் உய்ந்த நீரே சான்றாக இருப்பவும் இங்ஙனம்
கூறுவதென்னென்பார் எம் பெருமானருளிலார் போல இன்னண
மிசைப்பதென் அவர் செய் வெந்த வேதனையின் உய்ந்த நீர் என்று
பிள்ளையார் கூறினரென்க. நாள் கோள் முதலியன இறைவனடியார்க்கு
இன்னல் விளையாது நல்லனவேயாம் என்று அப்பொழுது பிள்ளையார்
பாடிய பதிகம் ழுவேயுறு தோளி பங்கன்ழு என்னும் கோளறு பதிகமாகும்;
ழுவேயுறு தோளி பங்கன் விடமுண்ட
கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள்செவ் வாய்புதன் வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு
முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல வடியாரவர்க்கு மிகவேழு |
என்னும் முதற் பாட்டால்
கோட்களும், ஏனைய பாட்டுக்களாற் பிறவும்
நல்லன வாதல் கூறப்பட்டமை காண்க. ஒவ்வொரு பாட்டிலும் இறைவன்
அம்மையோடு உளம் புகுந்திருந்ததல் கூறப்படுதலில் ஈண்டும்
அம்மையோடப்பன் என இந்நூலாசிரியர் கூறின ரென்க. (30)
[அறுசீரடியாசிரிவிருத்தம்]
|
மாமுர சொலிப்பச்
சங்கங் காகளம் வாய்விட் டேங்கச்
சாமரை பனிப்ப முத்தின் பந்தரிற் றரளத் தெய்வக்
காமரு சிவிகை மேற்கொண்* டமணிருள் கழுவுஞ் சோதி
யாமென நெறிக்கொண் டீச னிடந்தொறு மடைந்து பாடி. |
(இ
- ள்.) மாமுரசு ஒலிப்ப - பெரிய முரசங்கள் முழங்கவும், சங்கம்
காகளம் வாய்விட்டு ஏங்க - சங்கங்களும் திருச்சின்னமும் வாய்விட்டு
ஒலிக்கவும், சாமரை பனிப்ப - இருபுறங்களிலும் சாமரை அசையவும், முத்தின்
பந்தரில் - முத்துப் பந்தரின் கீழ். தெய்வக் காமருதரளச் சிவிகை
(பா
- ம்.) * மேல்கொண்டு
|