நூல்களாகிய பெரிய
கடலை நீந்திக் கரைகண்ட மன்னனே, உன்றன்
வலப்புறத்து நோய் இவரையும் - உனது வலப்பக்கத்திலுள்ள நோயினை
இவரையும், மற்றை நோய் எமையும் - இடப் புறத்து நோயினை எம்மையும்,
தொலைத்திடப் பணி என்றனர் - நீக்குதற்குக் கட்டளை யிடுவாயாக
வென்றனர்; கைதவன் சொல்வான் - பாண்டியன் கூறுவா னாயினன்.
ஆடவ
ருடம்பின் வலப்புறத்து நோய் வலிதும் இடப்புறத்து நோய்
எளிதுமாம் என்னும் மருத்து நூற் கொள்கையுணர்ந்து இங்ஙனம் கூறினர்
போலும். வலப்புறத்து நோய் தொலைத்திட இவரையும் மற்றைநோய்
தொலைத்திட எம்மையும் பணி யென்றனர் எனக் கூட்டியுரைக்க. (59)
அனைய செய்திரென் றிசையுமுன் சமணரு* மசோகன்
றனைநி னைந்துகைப் பீலியாற் றடவியுங் கரத்துக்
கனைகொ ளாலிநீர் சிதறியு நெய்சொரி கனல்போற்
சினவி மேலிடக் கண்டனர் தீர்ந்திடக் காணார். |
(இ
- ள்.) அனைய செய்திர் என்று இசையுமுன் - அங்ஙனமே
செய்யு மென்று உடன்படுமுன்னே, சமணரும் அசோகன் தனை நினைந்து -
அமணர்களும் அருகனை நினைந்து, கைப்பீலியால் தடவியும் - கையிலுள்ள
மயிற் பீலியினால் தடவியும்,கரத்துக் கனைகொள் நீர் ஆலி சிதறியும் -
கமண்டலத்திலுள்ள ஒலித்தலைக் கொண்ட நீர்த்துளியினைச் சிதறியும், நெய்
சொரி கனல்போல் - (அவற்றால் அந்நோய்) நெய் சொரிந்த
நெருப்புப்போல, சினவி மேலிடக் கண்டனர் - சினந்து மேலிடுதலைக்
கண்டாரேயன்றி, தீர்ந்திடக் காணார் - நீங்கக் கண்டிலர்.
அசோகன்
- அசோக மரத்தின் நிழலில் இருக்கும் அருக தேவன்.
கரகம் என்பது கரம் என விகாரமாயிற்று. ஆலி - நீர்த்துளி. (60)
தீயர் மானமிக் குடையராய்ச் செருக்கழிந் திருப்பப்
பாய கேள்வியோர் புண்ணியப் பையுணீ றள்ளிக்
காயு நோயது தணித்திடக் கருதினா ரதனை
மாய நீறென விலக்கினார் மாயை செய்தழிவார். |
(இ
- ள்.) தீயர் - அக்கொடியவர், மானம் மிக்குடையராய் -
மிகுதியும் மானமுடையவராய், செருக்கு அழிந்து இருப்ப - இறுமாப்பு
அழிந்து வாளாவிருப்ப, பாயகேள்வியோர் - பரந்த நூற்புலமையுடைய
பிள்ளையார், புண்ணியப் பையுள் நீறு அள்ளி - அறவடிவினதாகிய
பையுளுள்ள திருநீற்றினை அள்ளி, காயும் நோயது தணித்திடக் கருதினார் -
வெதுப்புகின்ற நோயினை நீக்கக் கருதினார்; அதனை மாயநீறு என -
அதனை மாயநீறு என்று கூறி, மாயை செய்து அழிவார் விலக்கினார் -
வஞ்சகம் புரிந்து அழியும் அவ்வமணர் தடுத்தனர்.
(பா
- ம்.) * இசைத்தலுமமணரும்.
|