என்பார் 'தாம் சொன்னசூள்
புலப்படத் துணிந்தும் வாய்மை நாணொரீஇ'
என்றார். (42)
ஏடநாங்க
ளெழுதியிட்ட பச்சையேடே ணாயிரம்
வீடவந்த நீவரைந்து விட்டவோலை யொன்றுமென்
வாடலின்றி நீரிலிட்ட வண்ணமான தாலிதுன்
பாடவஞ்செய் விஞ்சைகொண்டு பாவகற் பிணித்ததே. |
(இ
- ள்.) ஏட - ஏடா, நாங்கள் எழுதி இட்ட எணாயிரம் பச்சை ஏடு
வீட - நாங்கள் எழுதியிட்ட எண்ணாயிரம் பச்சை யேடுகளும் வெந்து
சாம்பராக, நீ வரைந்து விட்ட அந்த ஓலை ஒன்றும் - நீ எழுதிப் போட்ட
அந்த ஓரோலை மட்டும், வாடல் இன்றி - சிறிது வாடுதலும் இல்லாமல், நீரில்
இட்ட வண்ணமானது என் - நீரிலிட்டதுபோன்ற நிறத்தை யடைந்தது என்ன
காரணம், இது உன் பாடவம் செய் விஞ்சை கொண்டு - இது உன்னுடை
(பிறருக்கு) மகிழ்ச்சியை விளைக்கும் வித்தையைக் கொண்டு, பாவகன்
பிணித்ததே - அனலைக் கட்டியதேயாகும்.
அந்த
ஓலை எனவும், வண்ணமானது என் எனவும் கூட்டுக. ஆல்,
அசை. விஞ்சை - அக்கினித் தம்பன வித்தை. (43)
உங்களேடு
மெங்களேடு மும்பர்வா னளாய்விரைஇப்
பொங்கியோடும் வையைநீரி லிடுகவிட்ட போதுதான்
அங்குநீ ரெதிர்க்குமோலை வெல்லுமோலை யன்றியே
துங்கவேலை செல்லுமோலை தோற்குமோலை யாவதே. |
(இ
- ள்.) உங்கள் ஏடும் எங்கள் ஏடும் - நுமது ஏட்டினையும் எமது
ஏட்டினையும், உம்பர்வான் அளாய் விரைஇப் பொங்கி ஓடும் - வானின்மேல்
அளாவி விரைந்து கரைவழிந்து ஓடா நின்ற, வையை நீரில் இடுக -
வையையாற்றின் நீரினில் இடுவேமாக; இட்டபோது - அங்ஙனம்
இட்டபொழுது, அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை - அவண் நீரில்
எதிர்த்துச் செல்லும் ஓலையே வென்ற ஓலை; அன்றி - அங்ஙனமின்றி, துங்க
வேலை செல்லும் ஓலை - பெரிய கடலிற் செல்லும் ஓலை, தோற்கும் ஓலை
ஆவது - தோல்வியுறும் ஓலையாகும்.
உம்பர்
வான், ஒருபொருட் பன்மொழி; வானினது உச்சி
என்றுரைத்தலுமாம். விரைஇ, விரைந்து; சொல்லிசை யளபெடை. தான், அசை.
சமயத்தின் வென்றி தோல்வியை ஓலையின்மேல் ஏற்றி 'வெல்லுமோலை'
'தோற்குமோலை என்றார். (44)
வென்றுவீ
றடைந்தவர்க்கு வீறழிந்து தோற்றபேர்
என்றுமேவ லடிமையாவ தென்றிசைந்து கைதவக்
குன்றுபோலு நின்றகுண்டர் கூறலோடு மீறிலா
மன்றுளாடு மடிகண்மைந்தர் வாய்மலர்ந்து பேசுவார். |
|