வெங்குரு; கற்பாந்தத்தில்
அழியாது தோணியாக மிதந்தமையின் தோணிபுரம்;
வெள்ளைப் பன்றி யுருக்கொண்டு இரணியாக்கனைக் கொன்று, பூமியைக்
கொம்பிலேற்று நிறுவிய திருமால் பூசித்தமையின் பூந்தராய்; வெட்டுண்ட
தலைக் கூறாகிய இராகு பூசித்தமையின் சிரபுரம்; சிபியின்பாற் புறாவுருக்
கொண்டு வந்து சோதித்த அக்கினி பூசித்தமையிற் புறவம்; சண்பைப் புல்லை
ஆயுதமாகக் கொண்டு பொருது மடிந்த யாதவர் கொலைப்பழி தன்னை
அணுகா வண்ணம் கண்ணன் பூசித்தமையிற் சண்பை; காளி பூசித்தமையாற்
காழி; பராசரர் மச்சகந்தியைச் சேர்ந்து பெற்ற முடை நாற்றமும் பழியும்
போகப் பூசித்தமையின் கொச்சைவயம்; உரோமச முனிவர் ஞானோபதேசம்
பெற்று மலங்கழுவப் பெற்றமையின் கழுமலம் எனப் பெயர்க் காரணங்
காண்க; இன்னும் வெவ்வேறு காரணங் கூறப்படுவனவும் உள. இப்பதி
சைவசமய முதற்குரவராகிய திருஞானசம்பந்தர் திருவவதாரஞ் செய்து
மூன்றாம் ஆண்டிலே சிவபெருமான் உமாதேவியாருடன் எழுந்தருளிச்
சிவஞானம் கலந்த திருமுலைப்பால் ஊட்டியருளப் பெற்றுத் தோடுடைய
செவியன் என்னும் பதிகம் பாடி இறைவனைச் சுட்டிக் காட்டிய பெருமை
வாய்ந்தது; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி.
இருள்
நோய் தீர்க்கும் - உயிர்ப் பிணியாகிய ஆணவ இருளையும்
உடற் பிணியையும் தீர்க்கும் என்றுமாம். மருந்து என்றது வைத்தியநாதனாகிய
இறைவனை. மருந்துறைபதி - திருப்புள்ளிருக்கு வேளூர்; வைத்தீசுவரன்
கோயில்; திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பாடல்
பெற்ற சோணாட்டுத் திருப்பதி நோய் தீர்க்கும் மருந்து என்ற கருத்தினை,
ழுபேராயி ரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா வடியார்க்
கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமு மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண்
சிலைகைக்
கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே யாற்றநாள்
போக்கினேனேழு |
என்னும் திருத்தாண்டகத்திற்
காண்க. (18)
மதிநுத லிமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட் டேத்தும்
இதுதுலாப் பொன்னித் தான மெம்மனோர் மூன்று கோடி
மதிபெறு முனிவர் வந்து வழிபடு மூதூ ரீதிப்
பதியறக் கடவுள் பூசை பண்ணிய தானங் காண்மின். |
(இ
- ள்.) மதி நுதல் இமயச் செல்வி - பிறைச் சந்திரனை யொத்த
நெற்றியை யுடைய பனிமலையின் புதல்வியாகிய உமையம்மையார்,
மஞ்ஞையாய் வழிபட்டு ஏத்தும் இது - மயிலுருக் கொண்டு வழிபட்டுப்
பரவும் இப்பதி, துலாப் பொன்னித் தானம் - ஐப்பசித் திங்களில் தன்னில்
மூழ்குவோருக்கு வீடுபேற்றினை யருளுங் காவிரியை யுடைய மாயூர
மென்பதாகும்; எம்மனோர் மூன்றுகோடி மதிபெறும் முனிவர் வந்து
வணங்கும் மூதூர் இது - எம்மைப் போன்றாராகிய மூன்று கோடி அறிவுள்ள
முனிவர்கள் வந்து வணங்குகின்ற பழம்பதியாகிய திருக்கோடிகா இதுவாகும்;
இப்பதி அறக்கடவுள் பூசைபண்ணிய தானம் - இப்பதி அறக்கடவுளாகிய
கூற்றுவன் வழிபட்ட தருமபுர மாகும்; காண்மின் - பாருங்கள்.
|