விரும்பிய அரசன்
தன் சேனை யெல்லாம் பூட்டி இழுப்பிக்கவும் நிமிராத
திருவுருவம் கலயனார் கழுத்திற் கயிறு பூண்டு இழுக்கநிமிர்ந்த வரலாற்றைப்
பெரிய புராணத்திற் காண்க. திருப்பனந்தாள் திருஞான சம்பந்தர் பதிகம்
பெற்ற சோணாட்டுத் திருப்பதி. காப்பான், வினையெச்சம். தாபதன் என்று
பாட மோதுவாரு முளர். இப் பாடத்திற்குத் துருவாச முனிவன் குறைத்த இரு
கொம்புகளையும் நோற்றுப் பெற்ற என்க. அம் முனிவன் சாபத்தால் இரு
கொம்புடைய காட்டானையான வரலாற்றை வெள்ளையானைச் சாபந் தீர்த்த
படலத்தாலறிக. சிவப்பிரியன் என்னும் முனிவன் என்றுமாம். (20)
கரிமுகத்
தவுணற் காய்ந்து கரிமுகத் தண்ணல் பூசை
புரிசிவ நகர மீது தாரகற் பொருது செவ்வேள்
அரனையர்ச் சித்த தார்க்கீழ் மணற்குறி யான்பா லாட்டிப்
பரன்முடி மாலை சூடுஞ் சேய்வளம் பதியீ தாகும். |
(இ
- ள்.) கரிமுகத்து அண்ணல் - யானை முகத்தையுடைய மூத்த
பிள்ளையார், பரிமுகத்து அவுணன் காய்ந்து - கயமுகாசுரனைக் கொன்று,
பூசைபுரி சிவநகரம் ஈது - வழிபாடாற்றிய திருச்செங்காட்டங்குடி இது;
செவ்வேள் தாரகன் பொருது - முருகக்கடவுள் தாரகனைக் கொன்று,
அரனை அர்ச்சித்தது - சிவபெருமானை வழிபட்டதும், ஆர்க் கீழ் மணல்
குறி ஆன்பால் ஆட்டி - ஆத்தி மரத்தி னடியி லமைத்த மணலாலாகிய
சிவலிங்கத்திற்குப் பசுவின் பாலா லாட்டி, பரன் முடிமாலை சூடும் சேய்
வளம் பதி ஈது ஆகும் - அவ்விறைவன் திருமுடியிலுள்ள மாலையை
அணியும் சண்டீசர் திருவவதாரஞ் செய்ததுமாகிய திருச்சேய்ஞலூர்
இதுவாகும்.
கரிமுகத்
தவுணனது குருதி பரந்தமையால் அப்பதி செங்காடு எனவும்,
கணபதி தாபித்துப் பூசித்தமையால் அங்குள்ள திருக்கோயில் கணபதீச்சரம்
எனவும் பெயர் பெற்றன. சிவநகரம் - திருச்செங்காட்டங்குடி; சிறுத்தொண்டர்
தமது புதல்வராகிய சீராளதேவரைக் கறிசெய் தூட்டிப் பேறு பெற்ற தலம்;
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பாடல்
பெற்றசோணாட்டுத் திருப்பதி.
சேய்வளம்
பதி - சேய்நல் ஊர்; திருச்சேய்ஞலூர்; இது முருகக்கடவுள்
பூசித்தமையால் போந்த பெயர். இது திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்ற
சோணாட்டுத் திருப்பதி. ஆர் - ஆத்தி. கணபதி யானைமுகத் தசுரனைக்
கொன்று சிவபெருமானைப் பூசித்த வரலாற்றையும், முருகவேள் தாரகனைக்
கொன்று இறைவனைப் பூசித்த வரலாற்றையும் கந்தபுராணத்திலும், சண்டீசர்
அரனை வழிபட்டு மாலை சூடுந் தலைமைபெற்ற வரலாற்றைப் பெரிய
புராணத்திலும் காண்க. (21)
கறுவிவீழ்
காலன் மார்பிற் சேவடிக் கமலஞ் சாத்திச்
சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனற் பழன மூதூ ரதுவிது வானை தந்த
குறையுடற் போர்வை போர்த்த கொற்றவன் கோயில் காண்மின். |
(இ
- ள்.) கறுவி வீழ் காலன் மார்பில் - சினந்து மார்க்கண்டன்
மேல் வீழ்ந்த காலனுடைய மார்பில், சேவடிக் கமலம் சாத்தி - சிவந்த
திருவடித் தாமரையைச் சாத்தி, சிறுவனுக்கு ஆயுள் ஈந்த - அம் மாணிக்கு
வாணாளைக் கொடுத்தருளிய, சேவகப் பெருமான் மேய - வீரனாகிய
|