முன்ன மலைபசித்தீ
மூளுங் குறள்வீரற்
கன்னமலை யீந்த வருள்போற்றி - பின்னுமவன்
வெய்யபசிக் கன்னக் குழியுநீர் வேட்கைக்கு
வையையுந் தந்த வரம்போற்றி - ஐயைதனை
ஈன்றாள் கடலாட வேண்ட வெழுகடலுஞ்
சான்றா வரநிறுத்துந் தாள்போற்றி - வான்றாழ
வாழுமலை யத்துவச மன்னனைக்கூஉய்த் தேவியொடும்
ஆழி படிவித்த வருள்போற்றி - வேள்விவரு
வில்வளைக்கை நங்கை விறலுக் கிரகுமரச்
செல்வனைப் பெற்ற திறம்போற்றி - வேள்விவரு
மன்றன் முடித்து வளைசெண்டு வேல்கொடுத்து
வென்றிமுடி சூட்டும் விறல்போற்றி - வன்றிறல்வேல்
வேலை சுவற விடுத்துக் கிரகுமரன்
ஞாலம் புரந்த நலம்போற்றி - வேல்வலக்கைச்
சேயனைய வுக்ரன் றிகிரியெறிந் திந்திரன்போர்
சாயமுடிசிந்து சயம்போற்றி - ஆயவரி
வண்டலம்பு தார்க்குமான் மேரு மணிமுடிமேற்
செண்டெறிந்து வைப்பெடுத்த சீர்போற்றி - பண்டொருநாள்
ஆறறிய வந்தணருக் காதிமறைப் பொருளைத்
தேற விரித்த திறம்போற்றி - ஈறடைந்த
தென்னன் குமரன் றிருமுடிக்கு வாணிபராய்
நன்மணிகள் விற்ற நலம்போற்றி - நன்னகர்மேல்
வென்றி வருணன் விடுத்த கடல்பருகத்
துன்றுமுகி னான்கேவுஞ் சூள்போற்றி - கன்றியவன்
வான்மாரி யேழும் விடுப்பமழை நான்கும்போய்
நான்மாட மான நலம்போற்றி - தேனிதழி
வைத்த முடிமறைத்து மாடநக ரெங்கெங்குஞ்
சித்தரா யாடியருள் சீர்போற்றி - சித்தராய்
மன்னவன் கைக்கரும்பை வாங்கிக்கல் யானைக்குத்
தின்ன வளித்த திறம்போற்றி - தென்னவன்மேல்
வெங்க ணமணர் விடுத்த களிற்றைநர
சிங்கசரந் தொட்டெய்த சீர்போற்றி - தொங்குதிரை
மூப்பிளைய காளை முலையுண் குழவியெனக்
கோப்பருவங் கொண்ட குணம்போற்றி - மாப்பெரியோர்
தேறுநடந் தன்னையொரு தென்னன் றனக்கிரங்கி
மாறிநடஞ் செய்த மலர்போற்றி - ஆறடைந்தோர்
வஞ்சி யுயிரிழப்ப நாடு மறப்பழியை
அஞ்சி வெளிசெய்த வறம்போற்றி - வஞ்சமனத்
தாயைப் புணர்ந்தமகன் றந்தை தனைவதைத்த
தீயபழி தீர்த்தவருட் சீர்போற்றி - தாயனைய
ஆசான் மனைவிதன்மே லாசைவைத்த மாணவனைக்
கூசாமற் கொன்ற கொலைபோற்றி - மாசமணர்
வல்வித்தை செய்துவிடு வன்னஞ்ச வாளரவைக்
கொல்வித்த நல்ல குணம்போற்றி - வல்லமணர்
கூரியகோட் டாவை வரவிடுப்பக் கொல்லேற்றால்
|
|
|
|