அழகிய பெரிய கையைப்
பிடித்து, கொழுநருடன் போவாரும் - அவருடன்
நடந்து செல்வாரும்.
நெறிக்கொள்வாரும்
செல்வாரும் ஊர்வாரும் போவாரும் ஆகிய
படையன்ன மகளிரும் எனவருஞ் செய்யுளோடு இயைக்க. (24)
சுருப்புக் கமழ்தேங் கண்ணித் தொடுபைங் கழலா டவருங்
கருப்புச் சிலைமன் னவனாற் கருவிப் படையன் னவரும்
விருப்புற் றெறிநீர் வையை வெள்ளைத் தரளந் தெள்ளிப்
பொருப்பிற் குவிக்கும் புளினம் புறஞ்சூழ் சோலை புகுவார். |
(இ
- ள்.) சுரும்பு கமழ்தேம் கண்ணி - வண்டு மொய்த்த
மணங்கமழும் தேன் நிறைந்த மாலையையணிந்த, பைங்கழல் தொடு
ஆடவரும் - பசிய வீரக்கழல் அணிந்த ஆடவர்களும், கருப்புச்சிலை
மன்னவன் - கரும்பு வில்லையுடைய மன்மதனது, நால் கருவிப்படை
அன்னவரும் - நான்கு வகைப்பட்ட படைகளைப்போன் மகளிரும்,
விருப்புற்று - விரும்பி, எறிநீர் வையை - எற்றுகின்ற நீர் நிறைந்த
வையையாறு, தரளம் தெள்ளி வெள்ளைப் பொருப்பில் குவிக்கும் -
முத்துக்களைக் கொழித்து வெள்ளைமலைபோலக் குவிக்கின்ற, புளினம்
புறம் சூழ் சோலை புகுவர் - மணற்குன்றுகள் புறஞ்சூழ்ந்த சோலைகளிற்
புகுவாராயினர்.
சுரும்பு,
கரும்பு என்பன வலித்தல் பெற்றன; கருவிப்படை,
கருவியாகிய படை; இருபெயரொட்டு. (25)
கூந்தற் பிடியும் பரியு மூர்வார் கொழுநர் தடந்தோள்
ஏந்தச் சயமா தென்னத் தழுவா விழிந்து பொழில்வாய்ப்
பூந்தொத் தலர்பொற் கொடிதா துகுமா றென்னப் புனைந்த
சாந்தக் கலவை யுகப்போய் வனமங் கையர்போற் சார்ந்தார். |
(இ
- ள்.) கூந்தல் பிடியும் பரியும் ஊர்வார் - புறமயிரையுடைய
பெண் யானைகளிலும் குதிரைகளிலும் ஏறிச்சென்ற மகளிர், கொழுநர்
தடம்தோள் ஏந்த - தத்தம் கொழுநர்கள் பெரியதோளால் ஏந்த, சயமாது
என்னத் தழுவா இழிந்து - வெற்றிமகளைப் போலத் தழுவி இறங்கி,
பொழில்வாய் - சோலையினிடத்து, பூந்தொத்து அலர் பொற்கொடி தாது
உகுமாறு என்ன - பூங்கொத்துக்கள் அலர்ந்த பொன்போன்ற
கொடியினின்றும் மகரந்தஞ் சிந்துதல்போல, புனைந்த சாந்தக் கலவை உக
- அணிந்த கலவைச்சந்தனம் உலர்ந்து சிந்த, போய் - சென்று,
வனமங்கையர்போல் சார்ந்தார் - வனத்தில் வாழுந் தெய்வமகளிரைப் போல
அடைந்தனர்.
கொழுநரின்
தோளைத் தழுவினமையால் அத்தோள்மீது இருக்கும்
விசய இலக்குமிபோல் விளங்கின ரென்க. ஊர்வார் தழுவா இழிந்து
உகப்போய்ச் சார்ந்தார் என வினைமுடிக்க. (26)
|