கணைபோல் தைப்ப
- (மன்மதன்) எய்யும் நீண்ட கணைபோலப் பாயுமாறு,
கொழுநர் மார்பத்து எறிவார் - அவற்றைக் கணவர் மார்பில் எறிவார்கள்.
வளைப்பார்
முதலியவற்றை எச்சமாக்காது தனித்தனி முடித்தலுமாம்.
குமிழ் - குமிழம் பூப்போலும் மூக்கு. (31)
முத்தேர் நகையார் வளைப்ப முகைவிண் டலர்பூங் கொம்பர்ப்
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலிற் புகுந்து
தெத்தே யெனப்பாண் செய்து தீந்தே னருந்துந் துணையோ
டொத்தே ழிசைபா டிக்க ளுண்ணும் பாண ரொத்தே. |
(இ
- ள்.) முத்து ஏர் நகையார் வளைப்ப - முத்துப்போன்ற அழகிய
பற்களையுடைய மகளிர் கொம்புகளை வளைக்க, முகைவிண்டு அலர்
பூங்கொம்பர் - அரும்புகள் நெகிழ்ந்து மலர்ந்த அப்பூங் கொம்புகளிலுள்ள,
புத்தேள் வண்டும் - புதிய ஆண் வண்டுகளும், பெடையும் - பெண்
வண்டுகளும், புலம்பி - ஒலித்து, குழலில் புகுந்து - அவர் கூந்தலிற் புகுந்து,
தெத்தே எனப் பாண்செய்து - தெத்தே என்று இசைபாடி, துணையோடு ஒத்து
ஏழ் இசைபாடி - விறலியோடு சேர்ந்து ஏழிசைகளையும் பாடி, கள் உண்ணும்
பாணர் ஒத்து - கள்ளினை அருந்தும் பாணர் போல, தீந்தேன் அருந்தும் -
இனிய தேனைப் பருகும்.
கொம்பர்,
ஈற்றுப்போலி; வருஞ்செய்யுளிலும் இது. புத்தேள் - புதுமை
என்னும் பொருட்டு. தெத்தே, அனுகரணம். துணையுடன் ஏழிசைபாடி
அதற்குப் பரிசிலாகக் கள்ளினைப் பெற்றுண்ணும் பாணர்போல வண்டு
பெடையுடன் பாண் செய்து தேனருந்தும் என்க. இது பரிவருத்தனையணி.
(32)
-
வேறு
|
இம்பர்வீ
டளிக்குந் தெய்வ மகளிரே யென்பார் கூற்றம்
வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து
கம்பமுற் றடிப்பூச் சிந்தி மலர்முகங் கண்ணீர் சோரக்
கொம்பரும் பணிந்த வென்றா*லுலகியல் கூறற் பாற்றோ. |
(இ
- ள்.) இம்பர் வீடு அளிக்கும் தெய்வம் - இந்நிலவுலகில் வீடு
பேறு அளிக்கும் தெய்வம், மகளிரே என்பார் கூற்றம் - மகளிரே என்றுரைப்
பாரது உரை, வம்பு அல மெய்யே போலும் - பொய்யல்ல மெய்யே போலும்;
வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து - வளையலணிந்த கையை யுடைய
அம்மகளிர் வளைக்க வணங்கி, கம்ப முற்று - நடுங்கி, அடிப்பூச்சிந்தி -
அவரடிகளில் மலர்களைச் சிதறி, மலர் முகம் கண்ணீர் வார - மலர்
முகத்தினின்றும் கண்ணீரொழுக, கொம்பரும் பணிந்த என்றால் -
கொம்புகளும் வழிபட்டன என்னின், உலகு இயல் கூறல்பாற்றோ - உலகின்
தன்மை கூறும் பகுதியையுடையதோ (அன்று என்றபடி).
(பா
- ம்.) * பணிந்த தென்றால்.
|