கோட்டுப்பூவும் பூத்ததை
யொத்தது என்பார். இன்னவன்றி யெழின்முல்லை
சண்பகம் பொன்னங் கோங்கமும் பூத்தது போன்றது என்றார்.
கொடிப்பூமுல்லை, ஏனைய கோட்டுப்பூக்கள். முல்லை, சண்பகம், கோங்கு
என்னும் உவமைகளால் முறையே பல், மேனி, தனம் என்னும் பொருள்களை
இலக்கணையாகக் கூறுதலின் இஃது உருவகவுயர்வு நவிற்சியணி. (46)
[கலி
நிலைத்துறை]
|
குரவ
வோதியர் கயந்தலை குறுகுமுன் கயலும்
அரவு மாமையு * மலவனு மன்னமு மகன்ற
பருவ ரால்களு மிரிந்தன பகைஞர்மே லிட்டு
வருவ ரேலெதிர் நிற்பரோ வலியிழந் தவரே. |
(இ
- ள்.)குரவ ஓதியர் கயந்தலை குறுகுமுன் - குராமலரை யணிந்த
கூந்தலையுடைய மகளிர் பொய்கையை அடையுமுன்பே, கயலும் அரவும்
ஆமையும் அலவனும் அன்னமும் அகன்ற - சேல்மீனும் பாம்பும் யாமையும்
ஞெண்டும் அன்னமும் அஞ்சி அகன்றன; பருவரால்களும் இரிந்தன -
பெரிய வரால் மீன்களும் ஓடின : பகைஞர் மேலிட்டு வருவரேல் - பகைவர்
மேலெழுந்து போருக்கு வருவரேல். வலி இழந்தவர் எதிர் நிற்பரோ -
வலியற்றவர் எதிர்த்து நிற்பரோ (நில்லார் என்றபடி).
கயல்
மகளிரின் கண்ணுக்கும், அரவு அல்குலுக்கும், ஆமை
புறவடிக்கும், அலவன் முழந்தாளுக்கும், அன்னம் நடைக்கும், வரால்
கணைக்காலுக்கும் அஞ்சி அகன்றொளித்தன என்றார். அகன்ற, அன்பெறாத
பல வறிசொல். ஓகாரம் எதிர்மறை. குறுகுமுன் அகன்றன இரிந்தன என்பது
விரைவுயர்வு நவிற்சி. முன்னர்க் கூறிய பொருளை முடித்தற்கு "பகைஞர்
மேலிட்டு வருவரேல் எதிர் நிற்பரோ வலி யிழந்தவரே" என உலகியல்பை
விதந்து கூறுவது வேற்றுப் பொருள் வைப்பணி. (47)
பண்ணெ னுஞ்சொலார் குடைதொறும் பன்மலர் வீழ்ந்த
தண்ணெ னுந்திரை யலைதொறு நிரைநிரை தாக்கல்
கண்ணு நீலமு முகங்களுங் கமலமும் வாயும்
வண்ண வாம்பலுந் தத்தமின் மலைவன வனைய. |
(இ
- ள்.) பண் எனும் சொலார் குடைதொறும் - பண் என்று
கூறப்படும் சொல்லை யுடைய மகளிர் மூழ்குந்தோறும், பல் மலர் - பல
மலர்கள், வீழ்ந்த தண்ணெனும் திரை அலைதொறும் - மேலெழுந்து வீழ்ந்த
குளிர்ந்த அலைகள் அலைக் குந்தோறும், நிரை நிரை தாக்கல் - வரிசை
வரிசையாக மோதுதல், கண்ணும் நீலமும் - கண்களும் நீலோற்பல
(பா
- ம்.) * அரவும் யாமையும்.
|