முடியிற்) சூடவும்,
நவின்றன கற்றுப் பாட வல்லவர் - கூறியருளிய
பாசுரங்களைக் கற்றுப் பாடவல்லவர்கள், மறையின் ஆறு மனுமுதல்
கலைபோல் பின்புசெல்ல - மறையின் வழியே மனுமுறை முதலிய கலைகள்
பின்செல்வதுபோலப் பின் செல்லவும், நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்து
அவைக்களத்தைச் சேர்ந்தான் - நூலாராய்ச்சி வல்ல புலவர் இருக்கும்
திருத்தமாகிய கழகத்தை அடைந்தனன்.
பாதம்
சொல்வரம்பிகந்த தென்பதனை,
"பாதாள மேழினுங்
கீழ் சொற்கழிவு பாதமலர்" |
என்னும் திருவாசகத்தாலறிக;
வேதத்தின்மேல் நிற்றலால் சொல்லைக்
கடந்தமை குறிக்கப்பட்டது. கலை செல்வதுபோல் என விரித்துரைக்க.
நவின்றன கற்றுப் பாடவல்லவர் - மாணாக்கர்; கற்றுச் சொல்லிகள்
எனப்படுவர் (101)
ஆரவை குறுகி நேர்நின் றங்கிருந் தவரை நோக்கி
யாரைநங் கவிக்குக் குற்ற மியம்பினா ரென்னா முன்னங்
கீரனஞ் சாது நானே கிளத்தினே னென்றா னின்ற
சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன். |
(இ
- ள்.) ஆர் அவை குறுகி - புலவர் நிறைந்த அவையினைச்
சார்ந்து, நேர் நின்று - எதிர் நின்று, அங்கு இருந்தவரை நோக்கி -
அங்கிருந்த புலவர்களைப் பார்த்து, நம் கவிக்குக் குற்றம் இயம்பினார் யார்
என்னா முன்னம் - எமது கவிக்குக் குற்றம் கூறினவர் யார் என்று
கேட்பதற்கு முன்னரே, கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் -
நக்கீரன் சிறிதும் அஞ்சாது நானே குற்றங் கூறினேன் என்றனன், நின்ற சீர்
அணி புலவன் - அதனைக் கேட்டு நிலைபெற்ற புகழ்வாய்ந்த புலவன்,
குற்றம் யாது என - குற்றம் யாதென்று வினவ, தேராக் கீரன் - தெளியாத
நக்கீரன்.
ஆரவை
- நிறையவை. யாரை, ஐகாரம் சாரியை. நின்ற சீர் -
நிலைபெற்ற புகழ்; வந்து நின்ற என்றுமாம். தேரா - பொருளுண்மை
தெரியாத. (102)
சொற்குற்ற மின்று வேறு பொருட்குற்ற மென்றான் றூய
பொற்குற்ற வேணி யண்ணல் பொருட்குற்ற மென்னை யென்றான்
தற்குற்றம் வருவ தோரான் புனைமலர்ச் சார்பா லன்றி
அற்குற்ற குழற்கு நாற்ற மில்லையே யென்றா னையன். |
(இ
- ள்.) சொல் குற்றம் இன்று - சொற்குற்ற மில்லை; வேறு பொருள்
குற்றம் என்றான் - வேறே பொருளின் குற்றமென்று கூறினான்; தூயபொற்கு
உற்ற வேணி அண்ணல் - தூயபொன்னை யொத்த சடையையுடைய
இறைவன், பொருள் குற்றம் என்னை என்றான் - பொருட்குற்றம் என்னை
என்று வினவினன் - தன் குற்றம் வருவது ஓரான் - தனக்குக் குற்றம்
வருவதை அறியாத கீரன், புனைமலர்ச்சார் பால் அன்றி - அணிந்த
|