4.

வென்று உளே புலன் களைந்தார் மெய் உணர் உள்ளம்                                     தோறும்
சென்று உளே அமுதம் ஊற்றும் திரு அருள் போற்றி                                     ஏற்றுக்
குன்று உளே இருந்து காட்சி கொடுத்து அருள் கோலம்                                     போற்றி
மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்                                     போற்றி.

4
உரை
   
5. சுரும்பு முரல் கடி மலர்ப்பூம் குழல் போற்றி உத்தரியத்                          தொடித் தோள் போற்றி
கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால்                          சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்து ஆண்ட அம்                          கயல் கண் எம் பிராட்டி
அரும்பும் இள நகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும்                          அடிகள் போற்றி.
5
உரை
   
6. பூ வண்ணம் பூவின் மணம் போல மெய்ப் போத                                     இன்பம்
ஆ வண்ண மெய் கொண்டவன் தன் வலி ஆணை                                     தாங்கி
மூ வண்ணன் தன் சந்நிதி முத் தொழில் செய்ய                                     வாளா
மே வண்ணல் அன்னான் விளை யாட்டின் வினையை                                     வெல்வாம்.
6
உரை
   
7. அண்டங்கள் எல்லாம் அணு ஆக அணுக்கள்                                     எல்லாம்
அண்டங்கள் ஆகப் பெரிது ஆய்ச் சிறிது ஆயின்                                     ஆனும்
அண்டங்கள் உள்ளும் புறம் புங்கரி ஆயின் ஆனும்
அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் றிந்த நல்லோர்.
7
உரை
   
8. பூவின் நாயகன் பூமகள் நாயகன்
காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு
ஆவி நாயகன் அம் கயல் கண்ணிமா
தேவி நாயகன் சே அடி ஏத்துவாம்.
8
உரை
   
9. பங்கயல் கண் அரிய பரம் பரன் உருவே தனக்கு                             உரிய படிவம் ஆகி
இங்கயல் கண் உலகம் எண் இறந்த சரா சரங்கள்                                ஈன்றும் தாழாக்
கொங் கயல் கண் மலர்க் கூந்தல் குமரி பாண்டியன்                   மகள் போல் கோலம் கொண்ட
அம் கயல் கண் அம்மை இரு பாதம் போது                   எப்போதும் அகத்துள் வைப்பாம்.
9
உரை
   
10. உண்மை அறிவு ஆனந்த உரு ஆகி எவ் உயிர்க்கும்                               உயிராய் நீரின்
தண்மை அனல் வெம்மை எனத் தனை அகலாது                      இருந்து சரா சரங்கள் ஈன்ற
பெண்மை உரு ஆகிய தன் ஆனந்தக் கொடி மகிழ்ச்சி                             பெருக யார்க்கும்
அண்மை அதா அம்பலத்துள் ஆடி அருள் பேர்                     ஒளியை அகத்துள் வைப்பாம்.
10
உரை
   
11. சடை மறைத்துக் கதிர் மகுடம் தரித்து நறும் கொன்றை                     அம் தார் தணந்து வேப்பம்
தொடை முடித்து விட நாகக் கலன் அகற்றி மாணிக்கச்                     சுடர்ப் பூண் ஏந்தி
விடை நிறுத்திக் கயல் எடுத்து வழுதி மரு மகன் ஆகி                                மீன நோக்கின்
மடவரலை மணந்து உலக முழுது ஆண்ட சுந்தரனை                            வணக்கம் செய்வாம்.
11
உரை
   
12. செழியர் பிரான் திரு மகளாய்க் கலை பயின்று முடி                    புனைந்து செம் கோல் ஓச்சி
முழுது உலகும் சயம் கொண்டு திறைகொண்டு நந்தி                  கணம் முனைப் போர் சாய்த்துத்
தொழு கணவற்கு அணி மண மாலிகை சூட்டித் தன்                    மகுடம் சூட்டிச் செல்வம்
தழை உறு தன் அரசு அளித்த பெண் அரசி அடிக்                   கமலம் தலை மேல் வைப்பாம்.
12
உரை
   
13. பொரு மாறில் கிளர் தடம் தோள் ஒரு மாறன் மனம்                          கிடந்த புழுக்கம் ஆற
வருமாறு இல் கண் அருவி மாறாது களிப்பு அடைய                          மண்ணும் விண்ணும்
உரு மாறிப் பவக் கடல் வீழ்ந்து ஊசல் எனத் தடுமாறி                              உழலும் மாக்கள்
கரு மாறிக் கதி அடையக் கால் மாறி நடித்தவரைக்                            கருத்துள் வைப்பாம்.
13
உரை
   
14. கல் ஆலின் புடை அமர்ந்து நால் மறை ஆறு அங்கம்                           முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரணம் ஆய்                           மறைக்கு அப் பாலாய்
எல்லாம் ஆய் அல்லதும் ஆய் இருந்த அதனை இருந்த                           படி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து                    பவத் தொடக்கை வெல்வாம்.
14
உரை
   
15. உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும் தறி நிறுவி                                  உறுதி யாகத்
தள் அரிய அன்பு என்னும் தொடர் பூட்டி இடைப்                        படுத்தித் தறு கண் பாசக்
கள்ள வினைப் பசு போதக் கவளம் இடக் களித்து                        உண்டு கருணை என்னும்
வெள்ள மதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வரு                        வினைகள் தீர்ப்பாம்.
15
உரை
   
16. கறங்கு திரைக் கரும் கடலும் கார் அவுணப் பெரும்                   கடலும் கலங்கப் கார் வந்து
உறங்கு சிகைப் பொருப்பும் சூர் உரப் பொருப்பும்               பிளப்ப மறை உணர்ந்தோர் ஆற்றும்
அறம் குலவும் அகத்து அழலும் அவுண மடவார்                          வயிற்றின் அழலும் மூள
மறம் குலவு வேல் எடுத்த குமரவேள் சேவடிகள்                          வணக்கம் செய்வாம்.
16
உரை
   
17. பழுது அகன்ற நால்வகைச் சொல் மலர் எடுத்துப் பத்தி                        படப் பரப்பித் திக்கு
முழுது அகன்று மணந்து சுவை ஒழுகி அணி பெற                        முக்கண் மூர்த்தி தாளில்
தொழுது அகன்ற அன்பு எனும் நார் தொடுத்த           அலங்கல் சூட்ட வரிச் சுரும்பும் தேனும்
கொழுது அகன்ற வெண் தோட்டு முண்டகத் தாள் அடி                   முடி மேல் கொண்டுவாழ்வாம்.
17
உரை
   
18. வந்து இறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை                                   ஆக்கும்
நந்தி எம் பெருமான் பாத நகை மலர் முடி மேல்                                   வைப்பாம்.
18
உரை
   
19. கடி அவிழ் கடுக்கை வேணித் தாதை போல் கனல்                                  கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறை இரந்தனை யான்                                  கற்பில்
பிடி அன நடையாள் வேண்டப் பின் உயிர் அளித்துக்                                  காத்த
முடி அணி மாடக் காழி முனிவனை வணக்கம்                                  செய்வாம்.
19
உரை
   
20. அறப் பெரும் செல்வி பாகத்து அண்ணல் அஞ்சு                              எழுத்தால் அஞ்சா
மறப் பெரும் செய்கை மாறா வஞ்சகர் இட்ட நீல
நிறப் பெரும் கடலும் யார்க்கும் நீந்துதற்கு அரிய ஏழு
பிறப்பு எனும் கடலும் நீத்த பிரான் அடி வணக்கம்                                    செய்வாம்.
20
உரை
   
21. அரவ அல்குலார் பால் ஆசை நீத்து அவர்க்கே வீடு
தருவம் என்று அளவில் வேதம் சாற்றிய தலைவன்                                     தன்னைப்
பரவை தன் புலவி தீர்ப்பான் கழுது கண் படுக்கும்                                     பானாள்
இரவினில் தூது கொண்டோன் இணை அடி முடிமேல்                                     வைப்பாம்.
21
உரை
   
22. எழுத அரு மறைகள் தேறா இறைவனை எல்லில்                                     கங்குல்
பொழுது அறு காலத்து என்றும் பூசனை விடாது                                     செய்து
தொழுத கை தலைமேல் ஏறத் துளும்பு கண்ணீருள்                                     மூழ்கி
அழுது அடி அடைந்த அன்பன் அடியவர்க்கு அடிமை                                     செய்வாம்.
22
உரை
   
23. தந்தை தாளோடும் பிறவித் தாள் எறிந்து நிருத்தர்                           இரு தாளைச் சேர்ந்த
மைந்தர் தாள் வேத நெறி சைவ நெறி பத்தி நெறி                           வழாது வாய் மெய்
சிந்தை தாள் அரன் அடிக்கே செலுத்தினர் ஆய் சிவா                        அனுபவச் செல்வர் ஆகிப்
பந்தம் ஆம் தொடக்கு அறுத்த திருத்தொண்டர் தாள்                       பரவிப் பணிதல் செய்வாம்.
23
உரை